Header Ads



ருஸ்தி ஹபீபின், பங்களிப்புக்கு நன்றி

மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை நாம் அறிந்திருப்போம்.

இதில் முஸ்லிம் அரசியல்வாதிகளும், பரபரப்புடன் காணப்பட்டுள்னர்.

சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் போதிய அறிவோ அல்லது விளக்கமோ இல்லை.

இந்நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இந்த சட்டத்தில் உள்ள குறைபாடுகளை விளக்கியும், முஸ்லிம் சமூகத்திற்கு ஒட்டுமொத்த பாதிப்பும் வராமல் நிதானமாக விடயங்களை கையாண்ட விதம் குறித்து மூத்த சட்டத்தரணியும், சமூக ஆர்வலருமான ருஸ்தி ஹபீபுக்கு முஸ்லிம் சமூகம் சார்பில் நன்றி தெரிவிக்கபட்டுள்ளது.

ருஸ்தி ஹபீப் ஒரு சட்டத்தரணி என்றவகையிலும், அரசியல் கட்சிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர் என்றவகையிலும் அவர் பாராளுமன்ற சபை அமர்வுக்கு வெளியே தன்னால் முடிந்த பங்களிப்பை ஆற்றியதாக கூறப்படுகிறது.

மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தில் சிறுபான்மை சமூகத்திற்கு ஏற்படவிருந்த சில பாதிப்புகளை குறைப்பதிலும், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுடன் இதுதொடர்பில் பேசவும், ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து சில எழுத்துமூல வாக்குறுதிகளை பெற்றுக்கொள்ளவும் இவர் முக்கிய பங்காற்றியதாக அறிய வருகிறது.

அந்தவகையில் ருஸ்தி ஹபீப் அவர்களுக்கு முஸ்லிம் சமூகத்தின் சார்பில் நன்றிகள்..!

2 comments:

  1. Thanks Mr.Rushdhi Habeeb...since we need lot of advice to the muslim community..

    ReplyDelete
  2. இவ்வாறான புத்திஜீவிகளை எமது முஸ்லீம் அரசியல்கட்சிகள் தொடர்ந்தும் முக்கிய ஆலோசனைகளுக்கு நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் .சகோதரர் ருஸ்தி அவர்கள் எமது முஸ்லீம் அரசியல் கட்சிகளுக்கு தொடர்ந்தும் வழிகாட்டக்கூடிய ஒரு பொறிமுறையை ஏட்படுத்திக்கொள்ள வேண்டும் .

    ReplyDelete

Powered by Blogger.