Header Ads



இலங்­கையர் என்ற சிந்­த­னையை ஏற்­ப­டுத்­தவே, ஸாஹிரா கல்லூரி ஆரம்­பிக்­கப்­பட்­டது - பிர­தமர் ரணில்

ஜன­நா­ய­கத்தை பாது­காத்து இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்கு இது எமக்கு கிடைத்­தி­ருக்கும் இறுதி சந்­தர்ப்­ப­மாகும். இதனை பயன்­ப­டுத்­திக்­கொள்ள அனை­வரும் முன்­வ­ர­வேண்டும். அத்­துடன் அனை­வரும் இலங்­கையர் என்ற சிந்­த­னையை ஏற்­ப­டுத்­தவே ஸாஹிரா கல்லூரி ஆரம்­பிக்­கப்­பட்­டது என்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

கொழும்பு ஸாஹிரா கல்­லூ­ரியின் வரு­டாந்த பரி­ச­ளிப்பு விழா நேற்று கல்­லூரி கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது. இதில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

எமக்கு சுதந்­திரம் கிடைத்த காலத்தில் இனப்­பி­ரச்­சி­னையோ மதப்­பி­ரச்­சி­னையோ இருக்­க­வில்லை. அனைத்து இன மக்­களும் இலங்கை மக்­க­ளா­கவே இருந்­து­வந்­தனர். இந்த ஒற்­று­மையை பாது­காப்­ப­தற்­கா­கவே 1948ஆம் ஆண்டு டி.எஸ்.சேனா­நா­யக்க தேசிய கீதத்தில் அனை­வரும் ஒரு­தாயின் பிள்­ளைகள் என்­பதை உறு­திப்­ப­டுத்­தினார். அதன் மூலம் நாட்­டு­மக்கள் அனை­வரும் எந்த இனத்­த­வ­­ராக இருந்­தாலும் இலங்­கையர் என்ற கொள்­கையில் செல்­ல­வேண்டும் என்று ஆசைப்­பாட்டார்.

அத்­துடன் எமது அண்­டைய நாடான இந்­தியா பிரித்­தா­னி­ய­ரி­ட­மி­ருந்து சுதந்­தி­ர­ம­டைந்­த­போது பாகிஸ்தான் பிரிந்து சென்­றது. என்­றாலும் இந்­தி­யாவில் முஸ்­லிம்கள், தமி­ழர்கள், பேகர் மற்றும் பெளத்­தர்கள் என பல இனத்­த­வர்கள் இருந்­தனர். இவர்கள் யாரும் தங்­களை இந்­தியர் என்று சொல்­லிக்­கொள்­ள­வில்லை. அதனால் இந்­தியா பல பிரி­வு­க­ளாக பிரிந்து விடுமோ என்ற அச்சம் அனை­வ­ருக்கும் இருந்து வந்­தது. அத்­துடன் இந்­தி­யாவின் பிரிவு இலங்­கைக்கும் தாக்கம் செலுத்­தலாம் என டி.எஸ். சேனா­நா­யக்க அச்­ச­ம­டைந்தார்.

அதனால் இந்த அச்­சத்தை போக்க எமது நாட்­ட­வர்கள் அனை­வரும் இலங்­கை­யர்கள் என்ற சிந்­த­னையை ஏற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்தார். அத­னையே இந்­தி­யாவின் ஜவ­கர்லால் நேருவும் ஆரம்­பித்தார். இன்று 70வரு­டங்கள் கடந்­துள்ள நிலையில் இந்­தி­யா­வுக்கு யார் சென்று கேட்­டாலும் அவர்கள் எந்த மதத்­த­வ­ராக இருந்­தாலும் இந்­தியர் என்றே கூறு­வார்கள். இந்­திய பிர­தமர் நேரு உரு­வாக்­கிய அந்த கோட்­பாட்டை அவ­ருக்கு பின்னால் வந்த அனைத்து பிர­த­மர்­களும் கடைப்­பி­டித்­து­வந்­தனர்.

அத்­துடன் இந்­திய அர­சி­யல்­வா­திகள் அந்த மக்­களை இந்­தியர் என்ற கொள்­கையை கொண்டு­சென்­றார்கள் ஆனால் எமது நாட்டில் சகல இன தலை­வர்­களும் அர­சி­யலில் இருந்­தபோதும் இனப்­பி­ரச்­சினை மதப்­பி­ரச்­சினை, மொழிப்­பி­ரச்­சி­னையை ஏற்­ப­டுத்­தி­னார்கள். அதனால் நாங்கள் 30 வரு­டங்கள் யுத்தம் ஒன்­றுக்கு முகம்­கொ­டுக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. அதனால் எமது எதிர்­காலம் இல்­லா­ம­லாக்­கப்­பட்­டது. 77ஆம் ஆண்டு எம்­மை­விட பொரு­ளா­தா­ரத்தில் பின்­தங்கி இருந்த நாடுகள் இன்று எம்மை பின்­தள்­ளி­விட்டு சென்­றுள்­ளன.

அத­னால்தான் நாட்டின் தேசிய ஐக்­கி­யத்தை மீண்டும் கட்­டி­யெ­ழுப்ப அனைத்து கட்­சி­களும் இணைந்து தேசிய அர­சாங்கம் ஒன்றை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம். நாட்டு மக்கள் அனை­வரும் இலங்­கையர் என்று சொல்லும் நிலையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத்­திட்­டத்தை அர­சாங்கம் கொண்டு செல்­கின்­றது. அர­சாங்­கத்தில் சகல இனத்­த­வர்­களும் அங்கம் வகிக்கின்றனர். அவர்கள் தங்கள் உரி­மையை பாது­காத்­துக்­கொண்டு இலங்­கை­ய­ராக இருப்­பதில் எந்த பிரச்­சி­னையும் இல்லை. ஒரு முஸ்லிம், ஒரு இந்து தங்கள் மதத்தை பின்­பற்றி ஏனைய மதங்­க­ளையும் மதித்து  சிறந்த முஸ்­லி­மாக, இந்­து­வாக வாழ்­வதில் என்ன பிரச்­சினை இருக்­கின்­றது.

என்­றாலும் சிலர் இனப்­பி­ரச்­சி­னையை தொடர்ந்து முன்­னெ­டுக்­கவே விரும்­பு­கின்­றனர். அதே­போன்று சில ஊட­கங்­களும் ஒரு மதத்தை, இனத்தை மாத்­திரம் தெரி­வு­செய்து அவர்­க­ளது விற்­ப­னையை அதி­க­ரித்­துக்­கொள்­கின்­றன. அத்­துடன் வியா­பார­போட்­டி­யையும் இன­வாதம் அல்­லது மத­வா­தத்தை ஏற்­ப­டுத்தி சிலர் மேற்­கொள்­கின்­றனர்.ஒரு சிலர் இதி­லி­ருந்து மீள முடி­யாமல் இருக்­கின்­றனர்.

மேலும் இன்று  பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சி தலை­வராக தமிழர் ஒருவர் இருக்­கின்றார். அவ­ருடன் பல கட்­சிகள் இணைந்து செயற்­ப­டு­கின்­றன. அதனால் நாட்டில் ஜன­நா­ய­கத்தை பாது­காத்து இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்கு இது எமக்கு கிடைத்­தி­ருக்கும் இறுதி சந்­தர்ப்­ப­மாகும். இந்த பொறுப்பு எனக்கும் ஜனாதிபதிக்கும் மாத்திரம் உரியதல்ல. அனைவருக்கும் உரித்தானதாகும். அத்துடன் இன்று மக்களும் இனப்பிரச்சினையில் இருந்து விடுபட்டு இருக்கின்றனர். எனவே இந்த சந்தர்ப்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொண்டு நாட்டை பொருளாதார ரீதியில் உறுதிப்படுத்திக்கொள்ளவும் நாட்டு மக்கள் அனைவரும் இலங்கையர் என்று வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்தவும் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட முன்வரவேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.