Header Ads



ஜனாதிபதி மைத்திரிபாலவின் மனைவிக்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்யமுடியும் - மகிந்த

சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதியும் அவரது பாரியாரும் சில்க் துணிகளை பகிர்ந்தளித்ததை நான் பார்த்தேன், இப்படியே சென்றால் ஜனாதிபதியின் பாரியாருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையானது மிகவும் ஆபத்தானது எனவும் அவர் கூறியுள்ளார்.

கண்டியில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரச அதிகாரிகள் கைது செய்யப்படுவதால், அது நியாயமான ஒன்றாக இருந்தாலும் அதற்கும் நிதியுதவியை செய்ய மாட்டார்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.