Header Ads



ஜனநாயகத்தை கொலைசெய்ய அரசாங்கம், நடவடிக்கை எடுத்தமை கவலைக்குரிய செயல்.

அரசாங்கம் நேற்றைய தினம் அரசியல் ரீதியான சில தவறுகளை செய்ததாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று -21- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும இதனை கூறியுள்ளார்.

இலங்கையின் அரச தலைவர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, அரசாங்கம் இலங்கைக்குள் ஜனநாயகத்தை கொலை செய்ய நடவடிக்கை எடுத்தமை மிகவும் கவலைக்குரிய செயல்.

மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் அரசாங்கம் சில அடிப்படை தவறுகளை செய்துள்ளது.

அரசாங்கம் உயர் நீதிமன்றத்திடம் உள்ள உயரிய தன்மையை இல்லாமல் செய்தது. நீதிமன்றத்தின் அதிகாரத்தை பறித்துக்கொண்டுள்ளது.

சர்வஜன வாக்கெடுப்பின்றி மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என உயர் நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில், ஒத்திவைக்கும் சட்டத்தை நிறைவேற்றியதன் காரணமாக நீதிமன்றத்தை அரசாங்கம் சுரண்டிய பின்னர் வீசிய லொத்தர் சீட்டமாக மாற்றியுள்ளது.

எவரும் சர்வாதிகாரமாக ஆட்சி நடத்தி தீர்மானங்களை எடுப்பதற்கான வழியை அரசாங்கம் திறந்துள்ளது.

எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளவர்கள் எந்த திருத்தங்களையும் செய்து கொள்ள முடியும்.

சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல் ஆணைக்குழு என்பன மிகவும் தாழ்ந்த முத்திரைகளாக மாற்றப்பட்டன எனவும் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.