Header Ads



அறுகம்குடாவில் ஆழமான சேற்றுக்குள் இழுத்துச்சென்று, பிரித்தானியரை புதைத்த முதலை


அறுகம்குடாவில் நேற்று முன்தினம் முதலை இழுத்துச் சென்ற பிரித்தானிய ஊடகவியலாளரின் சடலம் நேற்று கடற்படையினரால் மீட்கப்பட்டது.

சிறிலங்காவுக்கு சுற்றுலா வந்திருந்த பிரித்தானியாவின் பினான்சியல் ரைம்ஸ் ஊடகவியலாளர் போல் மக் கிளீன் (25 வயது) அறுகம்குடாவில் தங்கியிருந்த போது, முதலைமலை என்று அழைக்கப்படும் பகுதிக்குச் சென்றிருந்தார்.

கடலும், நீரேரியும் சங்கமிக்கும்– முதலைகள் அதிகம் வாழும் அந்தப் பகுதியில், நீரேரியில் கைகழுவச் சென்ற போது, நேற்றுமுன்திம் பிற்பகல் 3.15 மணியளவில், முதலை ஒன்று ஊடகவியலாளரை இழுத்துச் சென்றது.

இதனை அவதானித்த மீனவர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், தேடுதல்கள் நடத்தப்பட்ட போதும், பிரித்தானிய ஊடகவியலாளரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், நேற்றும் சிறிலங்கா கடற்படையின் சுழியோடிகளின் உதவியுடன் தேடுதல் நடத்தப்பட்டது. இதன் போது, ஊடகவியலாளர் காணாமல்போன பகுதியில் ஆழமான சேற்றுப் பகுதியில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.

ஊடகவியலாளரின் வலது காலில் ஆறு அல்லது ஏழு இடங்களில் கடுமையான காயங்கள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆழமான சேற்றுக்குள் இழுத்துச் சென்று சடலத்தை முதலை புதைத்து வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் சிறிலங்கா வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.