Header Ads



இலங்கையிலுள்ள ரோஹின்ய அகதிகளை பாதுகாக்க, சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்

ரோஹின்ய அக­திகள் விவ­கா­ரத்தில் நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களை கையாண்டு வரும் ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் கருத்து தெரி­விக்­கையில், 

இந்த அக­திகள் யு.என்.எச்.ஆர்.சி. இன் அனு­ச­ர­ணை­யுடன் பொலிசாருக்கு முறையாக எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டே கல்கிசை பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். 

அனைத்து நடவடிக்கைகளும் நீதிமன்ற உத்தரவிற்கிணங்க சட்டபூர்மவாகவே முன்னெடுக்கப்பட்டன. 

இந் நிலையில் இதனை எவராலும் எதிர்க்க முடியாது.  இவர்களில் 16 சிறுவர்களும் 7 பெண்களும் இருக்கிறார்கள். இந்த அகதிகளைப் பாதுகாப்பது பொலிசாரின் கடமையாகும். இந்த அகதிகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை நாம் விரைவில் முன்னெடுக்கவுள்ளோம்'' என்றார்.

No comments

Powered by Blogger.