Header Ads



கடைக்குச் சென்ற பெண்­ணுக்கு திடீர் பிர­சவம், குழந்­தையை ஏந்­திக்­கொண்டு வீடு நோக்கி நடந்தார்


பெண்­ணொ­ருவர் கடைத் தெரு­வுக்குச் சென்­றி­ருந்­த­போது எதிர்­பா­ராத வித­மாக குழந்தை பெற்ற நிலையில், அக்­கு­ழந்­தை­யையும் தூக்கிக் கொண்டு வீடு நோக்கி நடந்து சென்ற சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றது.

சீனாவின் தென் பிராந்­திய நக­ரான யுன்ஃ­புவில் பெண்­ணொ­ருவர் பழங்கள் மற்றும் மரக்­க­றி­களை வாங்க முற்­பட்­ட­போது அப்பெண் நின்ற நிலை­யி­லேயே குழந்தை பிறந்­தது. 

திடீ­ரென அவரின் பனிக்­குடம் உடைய, அப்பெண் வீரிட்டார். சில விநா­டி­களில் குழந்­தை­யொன்று அவரின் கால்­க­ளுக்­கி­டையில் விழுந்­ததைப் பார்த்து அங்­கி­ருந்­த­வர்கள் அதிர்ச்­சி­ய­டைந்­தனர்.

 அவர்கள் அம்­பியூலன்­ஸுக்கு அழைப்பு விடுத்­த­தை­ய­டுத்து, அம்­பியூலன்­ஸுடன் தாதி­யர்­களும் அங்கு வந்­தனர்.

அத்­தா­தி­யர்கள் தொப்­புள்­கொ­டியை துண்­டிக்க உத­வினர். 30,40  வய­துக்­கி­டைப்­பட்­ட­ரென கரு­தப்­படும் இப்­பெண்ணை மேல­திக மருத்­துவ சோத­னை­க­ளுக்­காக அரு­கி­லுள்ள வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்ல மருத்­துவ ஊழி­யர்கள் முன்­வந்­தனர். 

எனினும், அப்பெண்  அதற்கு மறுத்தார். மாறாக, தனது குழந்­தையை ஒரு கையிலும் பொருட்கள் அடங்கிய பையை மறுகையிலும் ஏந்திக்கொண்டு தனது வீடு நோக்கி அவர் நடந்து சென்றார்.



1 comment:

  1. Child birth is a natural thing. Many couples in USA and Europe prefer home birth. In Asia countries they have make this great fuss.
    Ceaserrian rate are peak because of hospital birth.
    Many Ceaserrian are done for financial gain.

    http://m.timesofindia.com/life-style/health-fitness/health-news/Most-Caesarean-births-in-India-aimed-at-financial-gain/amp_articleshow/5455083.cms

    ReplyDelete

Powered by Blogger.