Header Ads



சகல தேர்தல்களும், கலப்பு முறையில் இடம்பெறும் - ரணில் உறுதி

எதிர்வரும் உள்ளூராட்சி, மாகாண, பாராளுமன்ற தேர்தல்கள், கலப்பு மற்றும் விகிதாச்சார முறைகள் அடங்கிய புதிய தேர்தல் கட்டமைப்பின் கீழ் இடம்பெறும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து விகிதாசார முறையில் உள்ள சில குறைபாடுகளை திருத்தியமைத்து புதிய தேர்தல் முறையில் எதிர்வரும் தேர்தல்களை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

குருணாகலை - மாவத்தகம - நிஸ்ஸங்க தேசிய பாடசாலையில் புதிய கட்டிடம் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் நேற்று (17) கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டார். 

விகிதாசார முறையின் கீழ் பாராளுமன்றத்தின் பிரதிநிதித்துவம் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு அடிப்படையில் வௌிப்படுத்தப்படும் என பிரதமர் சுட்டுக்காட்டினார். 

அந்த விடயத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார். 

எனினும், சில தேர்தல் தொகுதிகளில் எந்தவொரு கட்சிகளையும் சார்ந்த பிரதிநிதிகள் தெரிவாகாத சந்தர்ப்பங்கள் உள்ளன. 

இந்த நிலைமை உள்ளுராட்சி சபை மற்றும் பிரதேச சபைகளில் காணக்கூடியதாக இருப்பதுடன், அதன் காரணமாக விகிதாசார மற்றும் கலப்பு முறையில் மிகவும் சிறந்த தேர்தல் கட்டமைப்பை தோற்றுவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

எதிர்வரும் பிரதேச சபைத் தேர்தலுக்காக இந்த முறையை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ஒவ்வொரு தொகுதியிலும் உறுப்பினர் ஒருவரை நியமிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.