Header Ads



எத்தனையோ விடயங்கள் பற்றி கதைக்கும் இவ்வரசு, இதனை மாத்திரம் தூக்கிப் பிடித்துள்ளதேன்..?

தோல்விப் பயத்தில் அரசியலமைப்பில் மாற்றம் செய்து விளையாடும் இவ்ரசின் செயற்பாடு மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தவல்லதென ஹம்மாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

தேர்தலை பிற்போடு நோக்கில் மாகாணசபை தேர்தல் திருத்த சட்டமூலத்தை கொண்டுவந்தமை தொடர்பில் அவர் மேலும் கருத்ய்து தெரிவிக்கையில்...

இவ்வரசானது மூன்று மாகாண சபைகளினதும் காலங்கள் நிறைவடையவுள்ளதால்,அக் காலத்துக்கு முன்பு ஏதாவது செய்து அதனை நடத்தாமல் தடுப்பதற்கு இல்லாத பிரயத்தனங்களை மேற்கொண்டுவந்தது. நாங்கள் எமக்கு அஞ்சியே இதனையெல்லாம் செய்கிறார்கள் என கூறும் போதெல்லாம் சிலர் நம்ப மறுத்தனர். இவ்வரசின் தற்போதைய செயற்பாடுகளினூடாக அது தெள்ளத் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

பொலன்னறுவை தற்போதைய ஜனாதிபதியின் ஊராகும் இருந்த போதிலும் அண்மையில் நடைபெற்ற பொலன்னறுவை கூட்டுறவு சங்க தேர்தலில் இவ்வரசினர் படு தோல்வியை சந்தித்தனர்.ஒரு ஆட்சியிலுள்ள ஜனாதிபதியின் சொந்த ஊரிலேயே அவருக்கு மதிப்பில்லை என்றால் ஏனைய இடங்கள் பற்றி சொல்லத் தேவையில்லை.பொதுவாக கூட்டுறவு சங்க தேர்தலை பெரிதாக தூக்கிப் பிடிப்பதில்லை.மாகாண சபை தேர்தல்களில் அங்கு தோல்வியை தழுவினால், இவ்வாட்சியானது தகர்ந்துவிடும்.அது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அணியினருக்கு சாதகமாக அமைந்துவிடும். இது தான் மாகாண சபை தேர்தலை எது செய்தாவது தடை செய்ய முனைவதற்கான பிரதான காரணமாகும்.

20வது சீர் திருத்தத்தை கொண்டு வந்து கலைக்கப்படவுள்ள மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலை தடுக்கப்பார்த்தார்கள். அதற்கு நீதி மன்றம் ஆப்பு வைத்த மறு கனம் தேர்தல் மாற்றமென கூறி அடுத்த திட்டத்தை கொண்டு வந்தனர்.இவ் விரண்டுக்குமுள்ள ஒரே ஒரு ஒற்றுமை மாகாண சபை தேர்தலை தள்ளிப்போடுவதாகும்.

இவர்கள் தானே! முழு அரசியலமைப்பையும் மாற்றப் போகிறார்கள். அதன் ஒரு பாகமாக இதனையும் மாற்றலாமே!எத்தனையோ விடயங்கள் பற்றி கதைக்கும் இவ்வரசு, இதனை மாத்திரம் தூக்கிப் பிடித்துள்ளதேன்? இவைகளை சிந்தித்தால் தெளிவான பதிலை பெற்றுக் கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.