Header Ads



அருந்திகவின் பிரதியமைச்சர் பதவி, ஜனாதிபதியினால் பறிப்பு

சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் அருந்திக பெர்ணான்டோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (12) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 10 பேர் எதிர்வரும் வாரங்களில் விலகவுள்ளதாக சர்ச்சைக்குரிய கருத்தினை இவர் வெளியிட்டிருந்தார்.

அருந்திக பெர்ணான்டோ, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியதுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஜப்பானில் சந்தித்ததாகவும் கூறப்பட்டது.

அத்துடன் அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் இவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான அவசர சந்திப்பு ஒன்று இன்று (12) இரவு கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்தச் சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இரவு 8 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்தச் சந்திப்பில் தவறாது கலந்துகொள்ளுமாறு அனைத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக நேற்று (11) அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.