Header Ads



ரோஹின்ய முஸ்லிம்கள் பற்றி ஜனாபதிபதி, பிரதமருடன் சட்டத்தரணிகள் சங்கம் பேச்சு

இலங்கையில் தங்கவைக்கப்பட்டுள்ள மியான்மர் ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் மீது அடிப்படையற்ற எதிர்ப்புக்களை வெளிப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு, இலங்கை வழக்கறிஞர் சங்கம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த, அந்த சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் உதய ரோஹான் டி சில்வா, இந்த அகதிகள் விவகாரத்தில், அமைச்சர்கள் சிலர் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருவதாக குற்றம்சாட்டினார்.

இதனால், மக்களிடையே குழப்பம் உள்ளதாகக் கூறிய அவர், எந்த அடிப்படையில் அகதிகள் இலங்கையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த அறிவிப்பை அரசு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இந்த அகதிகள் இலங்கையில் தங்க வைக்கப்பட்டிருப்பதன் காரணமாக இதுவரை இலங்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறிய அவர், இவ்வாறான எதிர்ப்புகள் காரணமாக இலங்கையில் வசிக்கும் சிங்களம் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான நல்லினகத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்தார்.

எனவே இந்த விடயம் தொடர்பாக தனது சங்கம் விரைவில் ஜனாபதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். BBC

No comments

Powered by Blogger.