Header Ads



ரோஹின்யர்கள் பற்றி மோடி அரசு, நீதிமன்றத்தில் சொன்ன பச்சை பொய்

இந்தியாவில் உள்ள சில ரோஹிஞ்சா முஸ்லீம் அகதிகளுக்கும், மற்ற நாடுகளில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் இது நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த மனுவில், இந்தியாவில் ரோஹிஞ்சாக்கள் சட்டவிரோதமாக நுழைவதை ஒழுங்கமைக்கும் பல முகவர்கள் ஒரு வலையமைப்பாக செயல்பட்டு வருவதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் ஐநா மூலம் பதிவு செய்யப்பட்ட மற்றும் மியான்மரிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்த நாற்பதாயிரம் முஸ்லீம் ரோஹிஞ்சாக்களை நாடு கடத்துவதற்கு திட்டமிட்டுள்ள மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தொடங்கப்பட்ட வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கிய போது இக்குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

இவ்வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் மாதம் இரண்டாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.