Header Ads



யாழ்ப்பாணத்தில் மீலாத் விழா, விளையாட்டுப் போட்டிகள்

2017 ஆம் ஆண்டுக்கான மீலாத் விழாவின் இறுதி நிகழ்ச்சிகள்  இன்ஷா அல்லாஹ் யாழ்ப்பானத்தில் நடைபெறவுள்ளன. இதனை சிறப்பாக செய்வதற்காகான திட்டமிடலின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் விளையாட்டுப் போட்டியையும்  கண்காட்சியொன்றையும் நடத்த முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் ஆலோசகர்  முயீனுதீன் மற்றும் பணிப்பாளர் எம்.ஆர். எம். மலீக் ஆகியோர் வழங்கிய ஆலோசனைகளை செயற்படுத்த நாம் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியவர்களாக உள்ளோம். 

அந்த வகையில் விளையாட்டுப் போட்டிகளை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2017 நவம்பர் 3 ஆம் திகதியிலிருந்து 5 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் நடத்தலாம் என திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அந்த அடிப்படையில் விளையாட்டு நிகழ்ச்சிகள் முஸ்லிம்களுக்கான போட்டிகள் சகோதரர சமூகங்களுடான போட்டிகள் என்ற  இரண்டு   பிரிவுகளில் செய்வதனூடாக முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றிய சிறு செய்தியாவது சகோதர சமூகங்களைச் சென்றடையும் என்பது ஏற்பாட்டாளர்களின் நம்பிக்கை ஆகும். 

போட்டிகள் சகல் வயது பிரிவினர்களுக்குமான போட்டிகளாகவும் கழகங்களுக்கிடையிலான போட்டிகளாகவும் இடம் பெறும்.   முஸ்லிம்களுக்கு மட்டுமான போட்டிகள் ஐந்து கழகங்களாக  பிரிக்கப் படும்.  யாழ் முஸ்லிம்கள் மத்தியில் காணப் பட்ட ஆரம்பகால கழகங்களை ஞாபகப் படுத்தும் விதமாக அவற்றின் பெயர் அமையும்.  ஜொலி ஸ்ரார், கிரஸன்ட், சம்சுன், சன்ரைஸ், ரோசன் விளையாட்டுக் கழகங்களின் பெயரில் போட்டிகளில் பங்கு பற்ற முடியும்.  

30 வயதுக்கு கீழ் பட்டோர் அணி 30 வயதுக்கு மேற்பட்டோர் அணிகள் என்ற அடிப்படையில் புட்சால் உதைப்பந்து போட்டி இடம் பெறும். இதன் விதிமுறைகள் சாதாரண உதைப்பந்தாட்டப் போட்டிகளில் இருந்து வேறுபட்டது. ஒவ்வொரு கழகமும் இரண்டு அணிகளைக் (30 இக்கு கீழ் , 30 இக்கு மேல்) களமிறக்க வேண்டும். 

அடுத்தது யாழில் உள்ள 8 கழக்ங்களுக்கிடையிலான உதைப் பந்தாட்டச் சுற்றுப் போட்டி. இந்தப் போட்டியில் புத்தளத்திலுள்ள யுனைடட் அணி யாழ்ப்பாணத்தில் உள்ள யுனைடட் அணி ஆகியன உட்பட யாழின் ஏனைய ஆறு கழகங்கள் உள்வாங்கப் படும். 

இதைவிட கழகங்களுக்கு இடையிலான ஓட்டப் போடிகள், யானை ஓட்டம், தடை தாண்டி ஓட்டம் , வயதானவர்களுக்கான 50 வயதுக்கு மேற்பட்டோர் நடைப் போட்டிகள் கரண்டி பலன்சிங், போன்ற  ஏனைய தடகள போட்டிகள் இடம்பெறும். இவற்றை விட தனிப்பட்ட நபர்களுக்கான சைக்கிள் பலன்சிங், மோட்டார் சைக்கிள் பலன்சிங் போன்ற போட்டிகளும் இடம்பெறும். 

சகோதர சமூகத்தவர்களின் வீரர்களையும் கூட்டுச் சேர்த்து மரதன் ஒட்டப் போட்டி (அரியாலையில் இருந்து நல்லூர் ஊடாக சோனகபுரம் வரை. அதே போன்று சைக்கிள் ஓட்டப் போட்டி அரியாலையில் இருந்து குருநகர் ஊடாக தின்னைவேலி சென்று  அங்கிருந்து கொக்குவில் ஊடாக சோனகபுரத்தை அடைதல் போன்ற போட்டிகள் நடத்தப் படவுள்ளன. 

இந்த நிகழ்ச்சிகளை நடத்த யாழ்ப்பாணத்தில் சுவர்க்ககான் சுனீஸ்,  கே.எம். நிலாம், , ராஜு, மாஹிர், எம்.எம். ஜன்சீர், ஏ.ஆசாத், ஐ.ரொக்கீஸ், ஐ. ரொயிஸ்,  என்.எம். அப்துல்லாஹ், என். நிராஸ்,நௌசாத் ஆகியோர் பிரேரிக்கப் பட்டுள்ளனர். 

புத்தளத்தில், அலியார் தையூப், ஏ.எம்.மலீக் மௌலவி, ரிபாஸ் நசீர், என். எம்.நஸீர், நிலாம், ஏ.எச். பைரூஸ், எம்.ஏ.சி. ஜிப்ரி, கே சித்தீக் , மன்சூர் முராத்,  எம். ஜனோஸன் போன்றோரும்,  

நீர்கொழும்பில் எம்.எம். அஜ்மல், எம்.எஸ். ஜினூஸ், எம்.எம். முஸாதீக்,  ரௌசான், ஜமீந்தார், ஐ. இர்ஷாத் , நகீப் நிரூஸ், தமீம் ஏ.சி. இர்ஷாத், ஆகியோரும்

கொழும்பில்  எம்.ஏ.சி. மஹ்ரூப், எம்.ஏ.சி. எம். அமீன், அனீஸ் நௌசாத்  , எஸ்.எச். நியாஸ் ,  எம்.எஸ். மலீக், ஏ.ஆர். சிராஜ்,  போன்றோரும், 

பாணந்துறையில் பரீத் இக்பால், ஏ.எம்.ஜவாஹிர், எம்.இசட். எம். ஆசிம், மொஹிதீன் ரஜாய், போன்றோரும்
வவுனியாவில் எம்.ரி. நஸார், நகீப் நிப்ராஜ், என். சதாம், பபா  ஹாஜியார், ஏ. சப்ரி , ஏ.சி. உவைஸ், ரசீன்  சிராஜ் ஆகியோரும்

மதவாச்சியில்  எம்.எம். அரூஸ் , எம்.எம். அனீஸ் ஆகியோரும்  பிரேரிக்கப் பட்டுள்ளனர்.  

இந்த நிகழ்ச்சிகளுக்கான அலோசனைகளை ரம்ஸி டாக்டர், எம்.எஸ். எம். ஜான்சன், ஏ.சி. முபீன்,  பி.ஏ.எஸ். சுபியான், ஏ.ஜமால் மொஹிதீன், M.B. சரபுல் அனாம் ஆகிய  வழி நடத்தும் குழு உறுப்பினர்கள்  வழங்கவும் பிரேரிக்கப் பட்டுள்ளது. 
மேலும் நமது மேற்படி மீலாத் விழா நிகச்சிகளில்  பங்களிப்புச் செய்ய விருப்புவோர் தமது  விபரங்களை எஸ்.எம்.எஸ் மூலம் பின்வரும் இலக்கத்துக்கு  (0773292430  )தெரிவிக்கவும். 

இங்கு யாருடைய பெயரும் வேண்டுமென்று விடப் படவில்லை. இந்த தேசிய மீலாத் விழா நம் எல்லோரினதும் நிகழ்ச்சி. நபி ஸல் அவர்களின் எடுத்துக் காட்டுக்களைப் பின்பற்றி  புரிந்துணர்வுடன் வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது எல்லோரினதும் பொறுப்பாகும்.

No comments

Powered by Blogger.