September 05, 2017

தமிழ் மக்கள் மீதிருந்த கோபம், முஸ்லிம்கள் மீது திரும்பியுள்ளது - ஜெய­பாலன்

சிங்­க­ளத்தில்: ரேகா நிலுக் ஷி ஹேரத்
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்.

வ.ஐ.ச. ஜெய­பாலன் சர்­வ­தேச தமிழ் சமூ­கத்­தி­னரால் நன்கு மதிக்­கப்­ப­டு­பவர். கவிஞர், நாவ­லா­சி­ரியர், அர­சியல் செயற்­பாட்­டாளர், அர­சியல் ஆலோ­சகர் என்­றெல்லாம் அறி­யப்­பட்­டவர். அண்­மையில் சினிமா நட்­சத்­தி­ர­மா­கவும் தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­தி­யுள்ளார். சர்­வ­தேச சமூ­கத்தால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்ள நிலையில், இவர் ஓர் இலங்­கையர் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. யாழ் குடா நாட்டின் உடுவில் பிர­தே­சத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இவர், யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தின் மாணவர் சங்க கௌர­வ தலை­வ­ரா­கவும் விளங்­கி­யுள்ளார். இலங்­கையில் யுத்த சூழ்­நி­லையின் போது, புலம் பெயர்ந்து, நோர்வே நாட்டின் பிர­ஜா­வு­ரிமைப் பெற்று அங்கும் இந்­தி­யா­வி­லு­மாக வாழ்ந்து வரு­கிறார். சிங்­கள மக்கள் இவரை ஒரு தேசி­ய­வா­தி­யாகக் கருதி வரு­கின்­றனர். தமிழ் பகு­தி­களில் சிறு­பான்­மை­யி­ன­ராக வாழும் சிங்­கள, முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக அன்று புலி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­களைக் கண்­டித்து இவர் குரல் கொடுத்­த­மை­யாலே சிங்­கள மக்­களின் அபி­மா­னத்­திற்­கு­ரி­ய­வ­ராக விளங்­கு­கிறார். 

இவ­ருடன் ராவய வார இதழ் மேற்­கொண்ட நேர்­கா­ணலின் தமி­ழாக்கத்தின் சில பகுதிகள் இங்கு தரப்­ப­டு­கி­றது. 

கே:முஸ்­லிம்கள் மீதான எதிர்ப்பு குறித்து நீங்கள் என்ன நினைக்­கி­றீர்கள்?

நான் முஸ்லிம் சமூகம் சார்­பாக பேசி­வ­ரு­வது குறித்து முஸ்லிம் சகோ­த­ரர்கள் நன்­க­றி­வார்கள். வட புலத்­தி­லி­ருந்து அன்று முஸ்­லிம்­களை வெளி­யேற்­று­வ­தற்கு பிர­பா­கரன் தீர்­மானம் எடுத்­த­போது, அதற்கு நான் கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்தேன். நான் முஸ்லிம் மக்­க­ளுக்­காக கவி­தைகள் கூட வடித்­தி­ருக்­கிறேன். இதே­நேரம் நான் சிங்­கள மக்­க­ளிடம் முஸ்­லிம்கள் உங்­க­ளுடன் ஒன்­று­பட்டு செய­லாற்­றி­ய­தொரு சமூ­க­மல்­லவா? என்று கேட்க விரும்­பு­கிறேன். வர­லாற்று நெடு­கிலும் இடம்­பெற்ற இனப்­பூ­சல்­களின் போது, முஸ்­லிம்கள் சிங்­க­ள­வர்­க­ளுடன் தான் இருந்­தார்கள். அதனால் சிங்­க­ள­வர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயல்­ப­டு­வ­தற்கு எந்த வகை­யிலும் நியா­ய­மில்லை. எனவே எந்தப் பிரச்­சி­னை­யா­னாலும் சரி சிங்­க­ள­வர்கள் முஸ்­லிம்­க­ளுடன் பேசித் தீர்த்துக் கொள்­வதே சரி­யான வழி­யாகும். 

கே: சிங்­களத் தலை­வர்கள் இப்­போது செய்ய வேண்­டி­ய­தென்ன?

இன்­றுள்ள பரம்­ப­ரையில் தமிழ், சிங்­களம்,  முஸ்லிம் மக்­க­ளுக்­குள்ள பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு  காணக்­கூ­டிய  இறு­தி­யான ஒரே சந்­தர்ப்பம் புதிய  அர­சியல் யாப்­பே­யாகும். அர­சியல் மறு­சீ­ர­மைப்­பொன்று  உரு­வாக்கம் பெறும் பட்­சத்தில் தமிழ் புலம் பெயர்ந்த சமூகமும், சர்வதேச தமிழ் மக்களும் இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய  அர்ப்பணிப்புச் செய்வார்கள். சென்னை இலங்கைக்கு  பரந்தளவிலான சந்தை வசதியொன்றை உருவாக்கிக் கொடுக்கும்.  அப்போதுதான்  நாம் யுத்தத்தை வென்றெடுத்தோம் என்று சிங்கள மக்களால் மார்பு தட்டிக்கொள்ள முடியும். இந்தப் பொருளாதார விருத்தி  உண்மையிலேயே சமாதான காலத்தில்   முன்னெடுக்கப்பட்டதொன்றாகும். இலங்கையின்  ஏராளமான உற்பத்திப் பொருட்கள் சர்வதேசமெங்கும் சந்தைப்படுத்தப்பட்டன. 

டெல்மா தேயிலை உட்பட பெயர்போன வர்த்தக நுகர்வுப் பொருட்கள் பெருமளவில் வெளிநாடுகளில் விற்பனையான காலமும் அதுவே. யுத்தம் மோசமான  கட்டத்தையடைந்தபோது, தமிழ் செயற்பாட்டாளர்கள் சர்வதேச சந்தையில் இலங்கையின் உற்பத்திகளைப்  பகிஷ்கரித்தனர். கடைகளில் இலங்கையின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்வதையும் தடுத்தனர். ஒரு சில கடைகளில் காணப்பட்ட இலங்கைப் பொருட்களை  அழித்து நாசம் செய்தனர். 

அடுத்து சிங்களவர்களின் தேசாபிமானத்தை நான் வரவேற்கிறேன். அவ்வாறு நடந்து கொள்வதில் தவறில்லை. அடுத்து பெரும்பான்மையினர் என்ற வகையில் சிங்களவர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும். அதற்கவர்கள் செய்ய வேண்டியதென்ன? உலகமயமாக்கலை வெற்றி கொள்வதிலேயே உண்மையான வெற்றி தங்கியிருக்கிறது. இப்போது அவர்களின் இனப்பற்றிலே பிரச்சினையொன்றிருக்கிறது. அவர்கள் உலகமயமாக்கலைப் புரிந்து கொள்ள வேண்டும்.  

முந்திக்கொண்டு போகும் ஓர் இனமாக மாறக்கூடாது.  அத்துடன் தமது யுத்த வெற்றியில் சிறைக் கைதிகளாக சிங்களவர்கள் ஆளாவதும் நல்லதல்ல. எமது சந்ததிகளான  தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் சமஷ்டி முறையொன்று குறித்து கலந்துரையாடுவதற்குத் தயாராகவுள்ளனர்.  தவறும் பட்சத்தில் அடுத்துவரக்கூடிய சந்தயினர் சர்வதேச  சமூகத்துடனோ அல்லது  இந்தியாவுடனோ  இணைந்து சமஷ்டி முறையொன்றை ஏற்படுத்தும்  கலந்துரையாடலுக்கு தயாராவது தவிர்க்க முடியாது   போகும். 

நன்றி: ராவய

0 கருத்துரைகள்:

Post a Comment