Header Ads



ஜம்மியத்துல் உலமா, உடனடியாக களமிறங்க வேண்டும் - ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்து


இலங்கை முஸ்லிம்களுக்கு அடுத்துவரும் 6 மாதங்கள் அரசியல் ரீதியாக மிக முக்கியமானவை. எனவே முஸ்லிம் அரசியல்வாதிகளை ஒன்றுதிரட்டி, முஸ்லிம் சமூகத்திடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அகில ஜம்மியத்துல் உலமா களத்தில் குதிக்க வேண்டுமென ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா வலியுறுத்தியுள்ளார்.

மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் எல்லை நிர்ணயம், பல அங்கத்தவர் தொகுதி போன்ற விடயங்களுடன், புதிய அரசியலமைப்பு வரைவு பணி துரிதமடைந்திருக்கும் நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றுபட்டால் மாத்திரமே, முஸ்லிம்களின் இருப்பை தக்கவைத்துக்கொள்ள முடியுமெனவும் ஹிஸ்புல்லா ஜம்மியத்துல் உலமாவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இதுவிடயத்தில் தம்மாலும், தமது ஆளனியினராலும் உச்சக்கட்ட ஆதவை நல்க முடியுமெனவும் ஹிஸ்புல்லாஹ் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அலைவர் றிஸ்வி முப்தி மற்றும் அதன் முக்கியஸ்தர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

3 comments:

  1. why are you pulling ACJU here????/

    ReplyDelete
  2. He knew Muslim Unity is important in this matter, therefore nothing wrong. Our politicians are divided. So his message is to Unite our politicians through ACJU. Bro don't take everything negative. Take the good and leave the bad make live friendly.

    ReplyDelete
  3. Mr. Aafee is absolutely correct.

    ReplyDelete

Powered by Blogger.