Header Ads



முஸ்லிம்களாக ரோஹின்யர்களை பார்க்காதீர்கள் - அசாதுதின் ஓவைசி

மத்திய அரசு அகதிகள் கொள்கையில் 'பாசாங்கு காட்டுவதாக ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இடிஹதுல் மஸ்லிமேன் தலைவர் அசாதுதின் ஓவைசி எம்.பி குற்றம் சாட்டினார்.

ஹைதராபாத் எம்.பி., அசாதுதின் ஓவைசி சஞ்சல் குடாவில் பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:-

ரோஹிங்கியாவை முஸ்லீம்களாக அவர்களை பார்க்காதீர்கள், அவர்கள் அகதிகள். வங்காள தேச தூதர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வங்காள தேச  எல்லைக்குள் மூன்று லட்சம் அகதிகள் இருப்பதாகக் கூறினார். நீங்கள் ஒரு பிராந்திய சக்தியாக இருந்தால்,   நீங்கள் தான்  நிலைமையை சமாளிக்க வேண்டும்.

பிஜேபி அரசாங்கம் தற்போதைய நெருக்கடியை ஒரு இனவாத  மூலம் பார்க்கக்கூடாது . இந்த நடவடிக்கை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவில், இந்தியா விரும்பும் ஆசனத்தை பாதுகாக்கும் என்று கேட்டார்.

தஸ்லீமா நஸ்ரீம் பிரதமர் மோடிக்கு சகோதரியாக இருக்கும் போது. ரோஹிங்கியா அகதிகள் ஏன் அவரது சகோதரர்களாக இருக்க கூடாது.

எல்லாவற்றையும் இழந்த மக்களை  மீண்டும் அனுப்புவது  மனித தன்மை தானா? இது தவறு. எந்த சட்டத்தின் கீழ் மத்திய அரசு  ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் அனுப்ப முடியும்? இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. உலகில் 50 முஸலிம் நாடுகள் இருக்கும் போது, இந்தியா எதற்கு?

    ReplyDelete

Powered by Blogger.