Header Ads



'சிங்கள தேசியப் படை' என்ற அமைப்பு, ரோஹின்யர்களினால் இலங்கைக்கு ஆபத்து என்கிறது


சிறிலங்காவில் இருந்து ரொஹிங்யா அகதிகள் வெளியேற்றப்பட வேண்டும் என்று கோரி, கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் முன்பாக, நேற்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

சிங்கள தேசியப் படை என்ற பெயரிலான அமைப்பைச் சேர்ந்த சுமார் 50 பேர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரொஹிங்யா அகதிகளால் நாட்டின் இறைமைக்கு ஆபத்து உள்ளது. எனவே ரொஹிங்யா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன் ரொஹிங்யா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரும், மனுவொன்றையும், சிங்கள தெசியப் படையின் பொதுச்செயலரான அரம்பேபொல ரத்ன தேரர் , ஐ.நா பணியகத்தில் கையளித்தார்.

2 comments:

  1. அனைத்து அடாவடிதனங்களுக்கு பின்னால் இந்த தேரர் தேரைகள்தான் இருக்கின்றார்கள் இதனால் அவர்களின் முதல்நோக்கம் பிரபல்லியமாகவேண்டும் என்று நினைக்கின்ரார்கள் இதற்கு நல்லவழி ஏனையமக்களின் உருமைகளை தடுத்து அனியாயம் செய்வதைவிட தங்களை நிர்வானமாக்கிகொண்டு பாதைகளில் சுற்றிதிரிந்தால் மிக விரைவில் அவர்களின் நோக்கள் நடந்தேரும்.

    ReplyDelete
  2. புலிப்படை இல்லாததால்...

    ReplyDelete

Powered by Blogger.