Header Ads



தலதா மாளிகை, பாதைக்கு எதிராக சதிசெய்வது பாவமாகும் - லக்ஷ்மன் கிரியெல்ல

கடந்த அரசாங்கங்களால் அமைக்க முடியாது போன, மத்திய அதிவேக வீதியை இந்த அரசாங்கம் செய்வதால் அந்தப் பாதைக்கு பல்வேறு அபகீர்த்திகள் ஏற்படுத்தப்படுவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

மேலும், இவற்றுக்கு பிரதமர் தௌிவான விளக்கமளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளில் சந்திரிக்கா பண்டாரநாயக்க 10 வருடங்களும், மஹிந்த ராஜபக்ஷ 10 ஆண்டுகளும் ஆட்சி செய்தனர். கடந்த அரசாங்கங்களால் 20 வருடங்களில் செய்ய முடியாதவற்றை இந்த அரசாங்கம் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். 

உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

இதன்போது அவர் மேலும் கூறியதாவது, 

இது பொறாமை. இந்தப் பகுதியில் சிலர் இருக்கின்றனர், இந்த வேலைத் திட்டங்களை குழப்ப சதி செய்பவர்கள். காரணம் அவர்களுக்கு 20 வருடங்களாக மத்திய அதிவேக வீதியை அமைக்க முடியாது போனது. 

சில ஊடகங்களில் வினவப்படுகிறது இந்த கொழும்பு - கண்டி அதிவேக வீதி அமைப்பது எதற்காக என்று, இதில் முதலிட வருபவர்களையும் பயமுறுத்தி, மத்திய அதிவேக வீதி நிர்மாணப் பணிகளை நிறுத்த முற்படுகின்றனர். 

நாம் அவர்களுக்கு கூறுகிறோம், இது ஶ்ரீ தலதா மாளிகைக்கு வரும் பாதை, இதனை நிர்மாணிப்பதற்கு எதிராக சதி செய்வது பாவகாரியமாகும், என்றார். 

No comments

Powered by Blogger.