Header Ads



முஸ்லிம் மீடியா போரம் களுத்துறை மாவட்டத்தில் நடத்தும் ஒருநாள் ஊடக செயலமர்வு

ஊடகத் துறையில் அல்லது எழுத்துத் துறையில் ஆர்வம் உள்ளவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கிலும் வினைத்திறனான பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் முழு நாள் செயலமர்வொன்றை எதிர்வரும் 16ஆம் திகதி சனிக்கிழமை களுத்துறை, தர்கா நகரில் நடத்த திட்டமிட்டுள்ளது.

அனுபவமிக்க மூத்த ஊடகவியலாளர்கள், தராதரமுள்ள வளவாளர்களால் நடத்தப்படவுள்ள இச்செயலமர்வில் க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய களுத்துறை மாவட்ட மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள் பங்குபற்ற முடியும்.

பங்குபற்ற விரும்புபவர்கள் தமது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை muslimmediaforum@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது 0777874983 / 0777358658 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கோ செப்டம்பர் 12ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவும்.

செயலமர்வின் முடிவில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.


இவ்வண்ணம்,
என்.எம். அமீன்
தலைவர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்

No comments

Powered by Blogger.