Header Ads



ஞானசாரருக்கு, பச்சைக் கொடி காட்டும் துரைராஜசிங்கம்

பிரபாகரனுக்கு நந்திக்கடலில் ஒரு நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பின் பிக்கு ஒருவர் கூறுகின்றார். இது வரவேற்கத்தக்க விடயம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

இது துட்டகைமுனு அன்று கையாண்ட விடயம் என்பதனை நாங்கள் நினைவூட்ட விரும்புகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று சவுக்கடி தமிழ் கிராமத்தில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் 27ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,

இது போன்ற படுகொலைகள் இனிமேல் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் எமது தலைவர் சம்பந்தன் மிகவும் பக்குவமாகவும் நிதானமாகவும் கையாண்டு ஒரு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக செயற்படுகின்றார்.

நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் இந்த சட்ட மூலம் நிச்சயமாக அதற்கு ஏற்ற சூழ்நிலைகளை வகுத்துக் கொண்டு வரவேண்டும், அது நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும். அதன் அடிப்படையில் உண்மை கண்டறியப்பட வேண்டும்.

இரண்டாயிரம் வருடத்துக்கு முன் எல்லாளனுக்கும் துட்டகைமுனுவுக்கும் இடையில் நடந்த போரில் எல்லாளன் தவறி விழுந்தான்.

அவர் துட்டகைமுனுவால் கொள்ளப்படவில்லை. ஆனால் அவ்வாறு தவறி விழுந்த எல்லாளனை வாளால் வெட்டவில்லை, எட்டி உதைக்க வில்லை, கடலில் எறியவில்லை, அவரது வீரத்தை மதித்தான், அவரை தலை வணங்கி பொலன்னறுவையில் ஒரு நினைவுத்தூபியை அமைத்தான் துட்டகைமுனு.

இப்பொழுது பொதுபல சேனா இயக்கத்தின் பிக்கு ஒருவர் சொல்லுகின்றார் பிரபாகரனுக்கு நந்திக்கடலில் ஒரு நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும் என்று. இது வரவேற்கத்தக்க விடயம். இது துட்டகைமுனு அன்று கையாண்ட விடயம்.

எவ்வாறு இந்த யுத்தம் நடைபெற்றது? இதற்கு ஆணையிட்டவர் யார்? எந்த வகையில் அந்த ஆணை இருந்தது என்கின்ற விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு சர்வதேச நியமங்களின் அடிப்படையில் இதற்கு ஒரு முடிவு காணப்படவேண்டும்.

எமது தலைமைத்துவம் ஆளுமை கொண்ட தலைமைத்துவம், உலக நாடுகளினால் அங்கீகரிக்கப்பட்ட தலைமைத்துவம், இந்த நாட்டின் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தலைமைத்துவம், இவர்கள் காட்டுகின்ற வழியில் சென்று நாம் ஒரு விடிவை பெற வேண்டும், இழந்த சுதந்திரத்தை நாம் பெற்று வாழ வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

11 comments:

  1. சிங்களவரருக்கும் தமிழருக்குமான உறவு வரலாற்றுரீதியானது. எமக்கு இடையில் போர்கள் இடம்பெற்றாலும் இத்தீவீன் பூர்வீக மக்கள் நாங்கள் எமது சச்சரவுகளை மூலதனமாக்கி வியாபாரம் செய்ய நினைப்பவர்களை நாம் இணைந்து வெல்வோம்.

    ReplyDelete
    Replies
    1. ஐந்து சதத்திற்கும் பெறுமதியற்ற தமிழ் தீவிரவாதிகளிடம் நாம் புரிந்துகொள்ள என்ன உண்டு. திருடியது பறித்ததெல்லாம் இலங்கையில் சில வருடங்களுக்கு முன் தீவிரவாதம் செய்த தமிழ் புலி பயங்கரவாதிகள்

      Delete
    2. ஆமா சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் தான் வரலாற்று ரீதியாக தொடர்பிருக்கும் போது எதற்கு வட கிழக்கு இணைப்பு? சமஸ்டி? சிங்களவர்களோடு சேர்ந்து வாழலாமே.அப்படி பார்க்கப்போனால் பயங்கரவாதி பிரபாகரன் தான் ஒற்றுமையை குழைத்த படு பாதகனா?

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Gtx
      உம்மில் கோபம் வரவில்லை சிரிப்புதான் வருது.வடக்குகிழக்கு தமிழர்தாயகம் என்பது சர்வதேசத்தல் அங்கீகரிக்கப்பட்டது.ஆங்கிலயர் வருகைக்குமுன் அந்திய ஆட்சியீல் யாழ்ப்பாண நீதி மாவட்டம் எனும் பிரதேசமாக ஆட்சி செய்யப்பட்டது.பின்னர் ஆங்கிலேயரால் பிரிக்கப்பட்டது 5மாகாணமாக பிரிக்கப்பட்ட இலங்கையில் தமிழர் 70-80%வாழ்ந்த மாகாணம் கிழக்கு தமிழர் 90% வாழ்ந்த வடக்கு மாகாணமும் இருந்தது.
      பின்னர் சுதந்திரத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டு சிங்கள பிரதேசங்களான தீகபாபி லகுகாலை இணைக்கப்பட்டதால் தமிழர் வீதாசாரம் குறைக்கப்பட்டது.
      கஷ்மீருடன் உ.பி பஞ்சாப் போன்ற மாநீலங்களை இணைத்து விட்டு கஷ்மீர் இந்து பெரும்பான்மை மாநீலமென்றூ ககூறினால் என்ன ஏற்பீரா???

      Delete
    5. 1891 ம் ஆண்டு உண்மையான கிழக்குமாகாணத்தில் இறுதியாக நடந்த குடி மதிப்பீட்டீல் விபரம்.
      தமிழர்-63%
      சோனகர்-33%
      சிங்களவர்-04%

      Delete
  2. Dear துரைசிங்கம், பிரபாகரனுக்கு சிலை வைப்பது இப்போ முக்கியமில்லை.

    ஞானசேர தேரயை கிழக்கு க்கு அழைத்து வட-கிழக்கு இணைப்புக்கு ஆதரவு கேழுங்கள்.

    முஸலிம்கள் பொறாண்மை காரணமாக வட-கிழக்கு இணைப்பை எதிர்ப்பதால், இவரை போன்ற அரசில் அதிக செல்வாக்குள்ள அடிபடைவாத சிங்களவர்களின் ஆதாரவும் அவசியம்.

    ReplyDelete
    Replies
    1. பிரபாகரன் அப்பன் வந்தாலும் வடகிழக்கு இணையாது. வடகிழக்கை இணைத்து சமஸ்டியை கொடுக்க சிங்களவர்களென்ன புலி தீவிரவாதிகளை போல் முட்டாள்களா? உங்கட மிதமிஞ்சிய கற்பனை தாண்டா உங்கள இண்டைக்கு ஒன்றுமில்லாத கூட்டமாக மாற்றிவிட்டது. முதலில் வடக்கை ஒழுங்ககாக ஆட்சி செய்யுங்கள் கிழக்கை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம்.

      Delete
    2. @Gt x, கிழக்கை பார்த்துக்கொள்ளுவதற்கு நீங்கள் யாரு?

      கிழக்கில் 12% காணி உரிமைகள் தான் முஸலிமகளிடம் இருக்கிறது. தவிர புதிய சட்டத்தின் படி முஸலிம் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும்.

      எனவே கிழக்கில் தமிழர்களுக்கு தான் முன் உரிமை.





      Delete
    3. GTX
      கிழக்கை பார்த்துக்கொகொள்ள கிழக்கு என்ன உன் அப்பன் சொத்தா??
      கிழக்கில் 48%காணிகள் தமிழரிடமும் 40%காணிகள் சிங்களவரிடமும் உள்ளது.கிழக்கை பார்த்து கொள்கிறீரோ.ஹீஹீ

      Delete
  3. ஹா ஹா ஹா சிரிப்பை அடக்க முடியவில்லை... என்ன ஒரு ஒற்றுமை.. 😀😀😀

    ReplyDelete

Powered by Blogger.