Header Ads



மியன்மார் அக­திகள் தஞ்சம்பெற, இலங்­கை வரவில்லை - அவர்கள் மீது கருணை காட்டுங்கள் - ல­க்ஷமன் கிரி­யெல்ல

-MM.Minhaj-

மியன்மார் அக­திகள் தஞ்சம் கொள்ளும் நோக்­குடன் இலங்­கைக்கு வருகைதர­வில்லை. இந்­தி­யா­வுக்கு சென்ற போது படகு இயந்­திரம் செய­லிழந்­த­மை­யினால்இலங்­கைக்கு வந்­தனர். எனவே பெளத்த நாடு என்ற வகையில் மியன்மார் அக­தி­க­ளுக்கு கருணை காட்­டுங்கள் என உயர்­கல்வி மற்றும் நெடுஞ்­சாலை அபி­வி­ருத்தி அமைச்சர் ல­க் ஷமன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.

மியன்மார் அக­தி­க­ளுக்கு எதி­ராக நேற்று முன்தினம் நடத்­தப்­பட்ட தாக்­குதல் தொடர்பில் அமைச்சர் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், ஐக்­கிய நாடுகள் அமைப்பின் உத­வி­யுடன் மிரி­ஹான பொலிஸ் நிலை­யத்தின் அரு­கா­மை­யி­லுள்ள முகாமில் தடுத்து வைக்­கப்­பட்டு பின்னர் அங்­கி­ருந்து மியன்மார் அக­திகள் கல்­கிஸை பகு­திக்கு சென்­றுள்­ளனர்.
மியன்மார் அக­திகள் இலங்­கையில் தஞ்­ச­மா­கு­வ­தற்கு வர­வில்லை.

அவர்கள் ஆரம்­பித்தில் இந்­தி­யா­வுக்கே சென்­றனர். இந்­தி­யா­வுக்கு சென்ற வேளை அவர்கள் பய­ணித்த படகு இயந்­திரம் கோளாறு கார­ண­மாக செய­லி­ழந்­த­மை­யினால் செல்­வ­தற்கு இட­மின்றி இலங்­கைக்கு வருகை தந்­தனர்.

உண்­மையில் அவர்கள் அப்­பா­வி­க­ளாகும். தற்­போது இலங்­கையில் நிம்­ம­தி­யாக வாழ இட­ம­ளிக்க வேண்டும். இலங்கை ஒரு பெளத்த நாடாகும். பெளத்த தர்­மத்தை அனு­ச­ரித்து மியன்மார் அகதிகளுக்கு நாம் கருணை காட்ட வேண்டும்.எனவே இவர்கள் விடயத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.

1 comment:

  1. புதிய பொலிஸ் மா அதிபர் ஒருத்தன் சொன்னானே அது செய்வேன் இது செய்வேன் என்று எங்க இப்ப சென்று ஒளிஞ்சி கிட்டு இருக்கிறான் போததுக்கு நீதி அமைச்சர் மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர்கள் எங்கே.

    ReplyDelete

Powered by Blogger.