Header Ads



அப்பம் தின்று, தேநீர் குடித்ததை வைத்து என்னை அவ­மானப்படுத்தினர் - ஜனா­தி­பதி

கொழும்பில் நேற்று நடை­பெற்ற  ஸ்ரீ லங்கா சுதந்­திரக்கட்­சியின் 66 ஆவது வரு­டாந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்­புரை ஆற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன    பிர­ப­ல­மான அப்பம் உண்ட கதை விவ­கா­ரத்­துக்கு விளக்­க­ம­ளித்துப் பேசினார். 

நேற்­றைய கூட்­டத்தில்  ஜனா­தி­பதி  உரை­யாற்­று­கையில், 

அப்பம் உண்டு தேநீர் குடித்த கதை கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது மிக பிர­ப­ல­மான ஒன்­றாக மாறி­ய­துடன் என்னை அவ­ம­திப்­ப­தற்கு கூறும் கதை­யா­கவும் மாறி­யது.

ஆனால் அப்பம் உண்ட அன்­றைய தினத்தில் கட்­சியின் சிரேஷ்ட  முக்­கி­யஸ்­தர்கள்  சக­லரும் அமர்ந்­தி­ருந்­தார்கள்.  அப்­போது முன்னாள் ஜனா­தி­பதி நாம் தேர்­த­லுக்கு செல்வோம் என்றார்.  ஒரு­வரும் வாய்­தி­றந்து பதி­ல­ளிக்­க­வில்லை. அப்­போதும் நான் தேர்­த­லுக்கு செல்ல வேண்டாம் என்று வலி­யு­றுத்­தினேன். 

அப்­போது கட்­சியில் வாய்­தி­றந்து பேச சுதந்­திரம் இருக்­க­வில்லை. கட்­சி­யினுள்ளே ஜன­நா­யகம் இருக்­க­வில்லை. அப்­போது வாய் திறக்­கா­தி­ருந்­த­வர்கள் இன்று கட்சியினுள் சுதந்திரம் இருக்கின்ற போது அதனை விமர்சிக்கின்றார்கள் என்றார். 

No comments

Powered by Blogger.