Header Ads



அரசியல்வாதிகளின் விருப்புக்கு ஆடிய சிறைச்சாலை, வைத்திய அதிகாரிக்கு உடனடி இடமாற்றம்

வெலிக்கடை சிறைச்சாலையின் பதில் சிரேஷ்ட வைத்திய அதிகாரி நிர்மலி தேநுவரவிற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் பணி புரியும் 19 வைத்தியர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறித்த இடமாற்றத்திற்கு அனுமதியளித்துள்ளார்.

வெலிக்கடையில் கைதிகளாக இருக்கும் அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கேற்ப மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது தொடர்பில், 03 வைத்தியர்களின் ஆலோசனை அவசியம் என, மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி. சுவாமிநாதனினால் கடந்த வாரம் (11) அறிவிப்பொன்றை வழங்கியிருந்தார்.

சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள், சிறை வைக்கப்பட்டவுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றமை தொடர்பில் தமக்கு பல்வேறு குற்றச்சாட்டுகள் கிடைக்கப் பெற்றதை அடுத்தே தான் இத்தீர்மானத்திற்கு வந்ததாக அவர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சில் துணி வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட ஆகியோர் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததோடு, மற்றும் சில அரசியல்வாதிகள் ஏற்கனவே சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.