Header Ads



விக்னேஸ்வரன் கிடைக்காத ஒன்றை, கேட்டுக் கொண்டிருக்கின்றார் - மன்னார் ஆயர்

"புதிய அரசமைப்பில் அதியுச்ச அதிகாரப் பகிர்வுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டமை எமக்குக் கிடைத்த வரப்பிரசாதம். வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கிடைக்காத ஒன்றைக் கேட்டுக் கொண்டிருக்கின்றார் என மன்னார் மறைமாவட்ட ஆயர் யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தெரிவித்தார்.

புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

"புதிய அரசமைப்பில் அதியுச்ச அதிகாரப் பகிர்வுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டமையானது எமக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

நான் ஓர் அரசியல்வாதி அல்லன். நாட்டில் உள்ள அனைத்து மக்களும் சமாதானத்துடனும், சந்தோசத்துடனும் வாழவேண்டும் என்று நினைக்கின்ற ஒருவன்.

இதுவரை காலமும் தனி நாடு கோரி போராடி வந்தாலும், நாம் அதனைத் தற்போது கேட்க முடியாது. அதனை கேட்டாலும் இவர்கள் தரப்போவதில்லை.

இந்த நிலையில் தற்போது கிடைக்க உள்ள அதியுச்ச அதிகாரபகிர்வை நாம் ஒரு வரபிரசாதமாக பார்க்க வேண்டும். அதிகாரங்களை வழங்கிவிட்டு பின்னர் அவர்களுக்குத் தேவையானவாறு அதனைத் திரும்பப் பெற்றுக்கொள்ளாதவாறு திருத்தம் செய்யப்பட வேண்டும்.

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கிடைக்காத ஒன்றை கேட்டுக்கொண்டிருக்கிறார்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.