Header Ads



வைத்தியரின் கவனயீனம், குழந்தையின் உயிர் போனது - கதறும் தாய்

கொழும்பு தேசிய வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் கவனயீனத்தால் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக முறைப்பாடு பதிவாகியுள்ளதாகக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரத்தினபுரி பல்லேபெத்த எனும் பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தையே வைத்தியரின் கவனக்குறைவால் உயிரிழந்துள்ளது.

இது தொடர்பாக குழந்தையின் தாய் தெரிவித்துள்ளதாவது,

“கடந்த வருடம் டிசம்பர் மாதம் கண் பரிசோதனைக்காக என் குழந்தையை அழைத்துக்கொண்டு இரத்தினபுரி வைத்தியசாலைக்குச் சென்றேன். குழந்தையை பரிசோதித்த வைத்தியர் குழந்தையின் கண்களில் எந்த குறையும் இல்லை. குழந்தையின் தலையிலேயே கட்டி ஒன்று வளர்ந்து வருகின்றது என்று கூறி குழந்தையை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுத்தனர்.

அதன் பிறகு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியரொருவரால் குழந்தைக்கு முதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஒரு மாத காலம் வரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவிட்டு வீட்டுக்கு அழைத்து வந்தோம்.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாகவும் கட்டியின் ஒரு பகுதி இன்னும் தலையில் இருப்பதாகவும் இன்னும் ஒரு மாதகாலத்தின் பின்னரே எஞ்சியுள்ள பகுதியை அகற்ற முடியும் என தெரிவித்தனர்.

சிறிது நாட்களின் பின்னர் குழந்தையின் கால் பின்னி கீழே விழுந்துவிட்டான் அதனால் குழந்தையை இரண்டாவது முறையாகவும் வைத்தியரிடம் காட்ட அழைத்துச் சென்றோம். 

அங்கு சென்றதும் முதல் முறை அறுவை சிகிச்சை செய்த வைத்தியரின் வாட்டில் குழந்தையை அனுமதித்து இரண்டாவது அறுவை சிகிச்சையையும் செய்தனர்.

அதன் பின்னரே தெரிந்து கொண்டோம் குழந்தைக்கு முதல் முறை அறுவை சிகிச்சை செய்த சான்றிதழ்களைப் பார்க்காமலே இரண்டாவது அறுவை சிகிச்சையையும் செய்துள்ளனர் என.

இறுதிக் கட்டத்திலேயே தெரிந்து கொண்டோம் குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது புற்று நோய் என்று. இது சம்பந்தமான தகவல்கள் முதல் முறை அறுவை சிகிச்சை செய்த சான்றுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சான்றுகளைவிட வேறு ஒரு வாட்டில் இருந்தே எனது கணவர் எடுத்து வந்தார். 

அதன் பிறகே குழந்தையை மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பினர். அங்கு குழந்தையை பரிசோதித்த வைத்தியர் குழந்தைக்கு நோய் முற்றிவிட்டது இதற்கு மேல் எதுவும் எம்மால் செய்ய முடியாது ஆரம்பத்திலேயே அழைத்து வந்திருந்தால் குழந்தையை காப்பாற்றியிருக்கலாம் என கையை விரித்து விட்டனர்”  என கண்ணீர் மல்க தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்

No comments

Powered by Blogger.