Header Ads



குறித்த வழக்கு தொடர்பில், யாரும் எதுவும் என்னிடம் பேச வேண்டாம் - ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் அரசாங்க பணத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், அமைச்சர்கள் சிலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தை பிரதிநித்துவப்படுகின்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியை சந்தித்து இந்த வழக்கு தீர்ப்பு தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்வது அவசியம் என குறிப்பிட்டுள்ளனர்.

மோசடியாளர்கள் மற்றும் மோசடி கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். இது தொடர்பில் யாரும் தலையிடக் கூடாதென ஜனாதிபதி நேரடியாக குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பில் யாரும் எதுவும் என்னிடம் பேச வேண்டாம் என ஜனாதிபதி அங்கு தெரிவித்துள்ளார்.

நியாயமான விடயங்கள் குறித்த விவாதிக்க தான் தயார் என ஜனாதிபதி கண்டிக்கும் வகையில் குறித்த அமைச்சர்களிடம், தெரிவித்துள்ளார் என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.