Header Ads



மேற்குலக சக்திகளே, ரோஹிங்கயர்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன - நாமல்

மேற்குலக சக்திகளே தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக மியன்மாரில் ரோஹிங்கயர்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து கொண்டிருப்பதாக ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

அவரது ஊடகப்பிரிவு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ..

அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கேரி இலங்கையில் இடம்பெற்றுள்ள ஆட்சி மாற்றங்களின் பின்னணியில் அமேரிக்கா பங்காற்றியது என ஆட்சி மாற்றத்தை அடிப்படையாக கொண்டு கூறியிருந்தார். இவர்களுக்கு இலங்கையின் விடயங்களில் தலையிட வேண்டிய என்ன தேவை உள்ளது. அமெரிக்காவானது ஒரு விடயத்தை சாதிக்க நினைத்துவிட்டால் அதற்கு எத்தனை பலிகளை கொடுக்கவும் தயங்காது.அந்த வகையில் தான் இலங்கையில் அனைத்தும் நடந்தேறியிருந்தன.

தற்போது மியன்மார் நாட்டில் அனைவரும் கண்டிக்கத் தக்க வகையிலான முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு சம்பவங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.ராக்கைன் மாநிலமானது கடல் பிரதேசத்தை அண்டிய ஒரு பகுதியாகும். இப் பகுதியில் அமேரிக்கா போன்ற நாடுகள் எண்ணை சுரங்க பாதை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வாதாக அறிய முடிகிறது.அதற்கு இப் பகுதிகளில் மக்கள் வாழ்வது தடையாகவுள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்கும் தைரியம் அவ்வளவு இலகுவில் யாருக்கும் வந்துவிடாது. இதன் பின்னால் மிகப் பெரும் சக்திகளின் ஆதரவுகள் இருக்க வேண்டும். மியன்மாரில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் இஸ்ரேலின் ஆயுதங்கள் என இஸ்ரேலின் முன்னாள் பொலிஸ் ஆணையாளர் ஒருவர் கூறியிருந்தார்.இது தெளிவான இராஜதந்திரமானது என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் பதிலளித்துள்ளார்.இந்த விடயங்களே இதன் பின்னால் உள்ள சர்வதேச சதிகளை இணங்காட்ட போதுமானதாகும்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் இடம்பெற்ற போது முஸ்லிம்கள் எம்மை இயன்றளவு தூற்றினார்கள்.இதனை தான் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தவர்களும்  எதிர்பார்த்தனர்.எனவே, முஸ்லிம்கள் தங்களுக்கு நடக்கின்ற அநியாயங்களின் உண்மை சூத்திரதாரிகளை இணங்கண்டு, அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்ற வகையிலான திட்டங்களை மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது என அவரது ஊடகப்பிரிவு அனுப்பிவைத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4 comments:

  1. Past govt your father also did same for srilankan muslims

    ReplyDelete
  2. Well your Joint Opposition has met the Ambassador of Myanmar in Colombo yesterday to support the Myanmar activities against Rohingyans.
    In the sameday you are sayibg like this, well good preplan to capture the regime

    ReplyDelete
  3. Good point... but you could have not support in your time....

    ReplyDelete
  4. இன்னும் இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் கொரவக்கன்கள் என நினைத்துக் கொண்டு இந்த கள்ளன் பேசுகின்றான்.

    ReplyDelete

Powered by Blogger.