Header Ads



சவூதி அரேபியா, மியன்மார் மீது போர் தொடுத்தால்..?

மியான்மரில் பெளத்த அரச பயங்கரவாதம் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையை நடத்திக்கொண்டிருக்கிறது.

இதனை கண்டித்து தலைநகர் சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது கண்டன உரையாற்றிய TNTJ பொதுச்செயலாளர் முஹம்மது யூசுப்,

மியான்மர் அரசின் அயோக்கியத்தனத்தை உலக நாடுகளும், ஐ.நா.சபையும் வேடிக்கை பார்த்து வருகிறது.

சவூதி அரேபியா மியான்மர் மீது போர் தொடுத்தால் மியான்மர் இருக்க இடம் தெரியாமல் போய்விடும். ஆனால் சவூதி அரேபியா உட்பட அனைத்து முஸ்லிம் நாடுகள் வேடிக்கை பார்த்து வருகிறது.

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள 40 ஆயிரம் ரோஹிங்கிய முஸ்லிம்களை இந்திய அரசு பொருளாதாரத்தை காரணம் காட்டி திருப்பி அனுப்ப போவதாக கூறுகிறது.

மியான்மரில் சுமூகமான சூழல் ஏற்படாத நிலையில் அவர்களை அனுப்புவது மனிதநேயமானது அல்ல.

40 ஆயிரம் அகதிகளுக்கு உணவு கொடுப்பதற்கு இந்திய அரசுக்கு சிரமம் என்றால் அந்த செலவுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்களிடம் திரட்டி தர தயாராக இருக்கிறது என்றார்.


2 comments:

  1. சவுதி அரேபியா மியன்மார் மீது போர் தொடுத்தால் ஏனைய முஸ்லிம் அல்லாத நாடுகள் தலையிட்டு நிலைமை முஸ்லிம்களுக்கு உலக மட்டத்தில் மோசமாக அமையும் .
    அல்லாஹ் பாதுகாப்பானாக.

    ReplyDelete
  2. சவுதி, மியன்மார் மீது போர் தொடுத்தால், இலங்கை, மியன்மார் சார்பில் தலையிடலாம்.

    ReplyDelete

Powered by Blogger.