September 19, 2017

தயவுசெய்து என்னைக் கொன்றுவிடுங்கள் - கதறும் ரோஹிங்யர்

-M.I.Abdul Nazar-

மியன்­மாரின் ராக்கைன் மாநி­லத்தில் இடம்­பெற்ற தாக்­கு­த­லின்­போது துப்­பாக்கிச் சூட்டுக் காயங்கள் மற்றும் வெடிப்புச் சம்­ப­வங்­க­ளின்­போது ஏற்­பட்ட காயங்கள் ஆகி­ய­வற்­றிற்கு இலக்­கான டசின் கணக்­கான ரோஹிங்ய அக­தி­க­ளுக்கு பங்­க­ளாதேஷ் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு வரு­கின்­றது. 

மிதி­வெ­டி­களில் சிக்­குண்ட பலர் தமது உடல் உறுப்­புக்­க­ளையும், கண்­க­ளையும் இழந்­துள்­ளனர். தென்­கி­ழக்கு பங்­க­ளா­தேஷில் அமைந்­துள்ள மிகப் பெரிய அர­சாங்க வைத்­தி­ய­சா­லை­யான சிட்­டா­கொங்கில் அமைந்­துள்ள மருத்­துவக் கல்­லூரி வைத்­தி­யர்கள் அவர்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிப்­பதில் பெரும் சிர­மங்­களை எதிர்­நோக்­கி­யுள்­ளனர். 

யூஸ்­டினா பரா பிர­தே­சத்தில் தினக்­கூ­லி­யாக வேலை செய்து வந்­தவர் 32 வய­தான யூஸுப் நோபி. அவர் மிதி­வெ­டியில் சிக்கி தனது இரண்டு கால்­க­ளையும், இரு கண்­க­ளையும் இழந்­துள்ளார். 'எனக்கு இனிமேல் வாழப் பிடிக்­க­வில்லை, தயவு செய்து என்னைக் கொன்­று­வி­டுங்கள்' எனக் கத­று­கிறார். 

யுஸுபின் மனைவி 26 வய­தான ராஜீவ் பேகம் மிகவும் அதிர்ச்­சி­ய­டைந்­துள்ளார். எமது குடும்பம் மிகவும் சிக்­க­லுக்­குள்­ளா­கி­யுள்­ளது. 'எங்­க­ளுக்கு இப்­போது என்ன செய்­வ­தென்று தெரி­ய­வில்லை' எனக் கூறு­கின்றார்.

அவர் தனது குடும்­பத்­தி­ன­ருடன் மியன்­மா­ரி­லி­ருந்து பங்­க­ளாதேஷ் எல்­லையைக் கடக்­கும்­போது மிதி வெடியில் சிக்­குண்டு அவ­ரது கணவர் காய­ம­டைந்தார். 

'நாங்கள் அனை­வரும் ஒரு குழு­வாக எல்­லை­யினைக் கடந்தோம், அதில் எனது தாயார், இரண்டு சகோ­த­ரர்கள், எனது கணவர்,எனது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகியோர் உள்­ள­டங்­கி­யி­ருந்தோம். நாங்கள் எல்­லை­யினை நெருங்­கி­விட்டோம், மறு­பக்­கத்தில் பங்­க­ளாதேஷ் மக்­களை எங்­களால் பார்க்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தது. திடீ­ரென பெரி­ய­தொரு வெடிப்புச் சத்தம் கேட்­டது. நாங்கள் சிதறி ஓடினோம். சில நிமி­டங்­களின் பின்னர் பங்­க­ளாதேஷ் எல்­லை­யினை அடைந்­த­போது எனது கணவரை காணவில்லை. அவரைத் தேடி எனது சகோ­த­ரர்கள் சென்­றனர். அங்கே எனது கணவர் இரு கால்­க­ளையும் இழந்த நிலையில் படு­கா­ய­ம­டைந்­தி­ருந்­ததைக் கண்­டனர்' என ராஜீவ் பேகம் தெரி­வித்தார். 

நாம் அவரை மூங்கில் கூடை­யொன்றில் வைத்துச் சுமந்­து­கொண்டு உள்­ளூ­ரி­லி­ருந்த எல்­லை­க­ளற்ற சுகா­தார மருத்­துவ மத்­திய நிலை­யத்­திற்கு கொண்டு சென்றோம். பின்னர் யூஸுப் நோயாளர் காவு வண்டி மூல­மாக கொண்டு செல்லப்­பட்டார். 

யூஸுபின் கட்­டி­லுக்கு அடுத்த கட்­டிலில் இருப்­பவர் மற்­று­மொரு ரோஹிங்ய அக­தி­யான மொஹமட் ஹுஸைன். இவரும் மிதிவெடியில் சிக்­குண்டு தனது ஒரு காலை இழந்­தவர். 

நான் எல்­லையைக் கடந்­து­கொண்­டி­ருந்­த­போது போது மியன்மார் இரா­ணு­வத்­தி­னரால் புதைக்­கப்­பட்­டி­ருந்த மிதி வெடியை மிதித்து விட்டேன். இதனால் ஏற்­பட்ட வெடிப்­பினால் சுமார் பத்­த­டிகள் மேலே தூக்கி வீசப்­பட்டேன். நான் உணர்­வி­ழந்து தரையில் விழுந்தேன்.

பின்னர் பங்­க­ளா­தேஷில் உள்ள உள்ளூர் சுகா­தார கட்டடத் தொகு­தி­யினுள் வைத்தே எனக்கு சுய நினைவு வந்­தது. ஹுஸைனின் மனை­வி­யியும் மயி­ரி­ழையில் தப்­பினர். ஹுஸைனின் மனை­வியே அவ­ரது குடும்­பத்­தையும் கவ­னித்­துக்­கொண்டு ஹுஸை­னையும் வைத்­தி­ய­சா­லையில் வைத்து பரா­ம­ரித்து வரு­கின்றார். 

'மிதி வெடி­யி­னாலும், துப்­பாக்கிச் சூட்­டி­னாலும் இவ்­வ­ளவு மக்கள் தொகை­யினர் காய­ம­டைந்­ததை இதற்கு முன்னர் நான் ஒரு­போதும் கண்­ட­தில்லை' என அவ்வைத்­தி­ய­சா­லையின் கட­மை­நேர வைத்­தியர் டாக்டர் தன்வீர் அஹமட் தெரி­வித்தார். 

'கடந்த இரு வாரங்­களில் மாத்­திரம் சுமார் 50 ரோஹிங்ய முஸ்­லிம்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளித்­தி­ருக்­கின்றோம். அவர்கள் அனை­வரும் மிதி வெடி­யி­னாலும், துப்­பாக்கிச் சூட்­டி­னாலும் காய­ம­டைந்­த­வர்கள். அவர்­களுள் இருவர் இரண்டு கால்­களையும், இருவர் இரண்டு கண்­க­ளையும் இழந்­துள்­ளனர்' எனவும் அவர் தெரி­வித்தார். 

'படு­கா­ய­ம­டைந்த சுமார் 42 ரோஹிங்ய அக­தி­க­ளுக்கு வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சை­ய­ளிக்­கப்­ப­டு­கின்­றது. அவர்­களுள் பெரும்­பா­லானோர் குறைந்­தது ஒரு காலை­யேனும் இழந்­து­விடும் ஆபத்­தினை எதிர்­நோக்­கி­யி­ருக்­கின்­றனர்' எனவும் அவர் குறிப்பிட்டார்.

எமது வைத்தியசாலையில் ஏற்கனவே நிரம்பியுள்ள நிலையில் புதிதாக வரும் நோயாளிகளுக்கு விடுதிகளில் கட்டில்களை வழங்க முடியாமல் இருக்கின்றது. பெரும்பாலான நோயாளிகள் வராந்தாக்களில் வைக்கப்பட்டுள்ளனர். மருந்து மற்றும் சிகிச்சை வசதிகளை அவர்களுக்கு வழங்குவதற்கு வைத்தியசாலை கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

0 கருத்துரைகள்:

Post a Comment