Header Ads



அச்சத்தில் ஆங்சான் சூகி, ஐ.நா. செல்வதிலிருந்து பின்வாங்கினார்...!


ரோஹிஞ்சா பிரச்சனையை கையாண்டது தொடர்பாக மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூச்சி மீது எழுந்துள்ள விமர்சனங்கள் அதிகரித்துள்ள சூழலில், அடுத்த வாரத்தில் நடக்கவுள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறை குறித்து கருத்து தெரிவிக்காத காரணத்தால் ஆங் சான் சூச்சி மீது மேற்குலகில் உள்ள அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வரும் செப்டம்பர் 19 முதல் 25-ஆம் தேதி வரை நியூயார்க்கில் நடக்கவுள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூச்சி பங்கேற்பதாக இருந்தார்.

மியான்மர் ரோஹிஞ்சாக்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்குமாறு சர்வதேச சமூகத்தை ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ கட்டெரஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

ரோஹிஞ்சா பிரச்சனையை இன அழிப்பு என்று வகைப்படுத்த முடியுமா என்று கேட்டதற்கு பதிலளித்த அன்டோனியோ கட்டெரஸ், 'மூன்றில் ஒரு பங்கு ரோஹிஞ்சாக்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதை விட வேறு வார்த்தைகளால் இதனை விவரிக்க முடியுமா? என்று வினவினார்.

No comments

Powered by Blogger.