Header Ads



ரஞ்சன் ராமநாயக்கவின், பிறப்பு சான்றிதழை கொண்டு வாருங்கள் - கூட்டு எதிர்க்கட்சி

ரஞ்சன் ராமநாயக்க சினிமாவில் நடிக்கும் ஒரு நடிகன். அவருடைய உண்மையான பெயர் என்ன? என நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த கேள்வி எழுப்பியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

ரஞ்சன் ராமநாயக்கவின் உண்மையான பெயர் என்ன? அவருடைய பிறப்பு சான்றிதழை கொண்டு வாருங்கள். அதில் ரஞ்சன் ராமநாயக்க என்றா உள்ளது?

அவருக்கு என்று ஒரு மதமும் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார். நீதித்துறையையும் பௌத்த மதத்தையும் அவமதித்த குற்றச்சாட்டுக்கு அவருக்கு நிச்சயம் தீர்ப்பு கிடைக்கும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திரிக்க அனுருத்த குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.