Header Ads



ரோஹின்யர்களை இனவாதக் கும்பல் மிரட்டியபோது, பொலிஸார் வேடிக்கை பார்த்தனர் - அசாத் சாலி

ஐ.நா அகதிகள் உயர்ஸ்தானிகாராலயத்தின் மேற்பார்வையில் கல்ஹிஸ்ஸையில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோஹிங்யா அகதிகளை அங்கிருந்து வெளியேற்ற, அவர்களை தீவிரவாதிகள் எனக் குற்றஞ்சாட்டி முஸ்லிம் அரசியல்வாதிகளையும் தூஷித்த இனவாதிகளின் அடாவடித்தனங்களை இன்னும் இந்த அரசு பார்த்துக்கொண்டிருப்பது நல்லாட்சி அரசின் கையாலாகத்தனத்தைக் காட்டுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்.

இன்று -26- காலை ரோஹிங்யா அகதிகளை பொலிஸாரின் உதவியுடன் மிலேச்சத்தனமாகவெளியேற்றிய இனவாதிகள் சம்பவ இடத்தில் ஐ நாஅதிகாரிகள் மீதும் தனது அடாவடித்தனங்களை பிரயோகித்ததுடன், என்னையும் அமைச்சர்ரிஷாட்டையும் கேவலமாக திட்டித்தீர்த்தனர்.

பொதுபலசேனா இயக்கத்தின் வழிகாட்டலில் அங்குசென்ற இந்த இனவாதக் கும்பல் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அகதிகளை மிரட்டியமையை பொலிஸார் பார்த்துக் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் ஐ நா அதிகாரிகளையும் மிரட்டியமைஇந்த நாட்டின் சட்டம் ஒழுங்கின் இலட்சணத்தைக்காட்டுகின்றது. 

இந்த சம்பவத்துக்கு அரசு வெட்கப்பட வேண்டும். நல்லாட்சியென்று கூறிக்கொண்டு இனவாதிகளைதாலாட்டி வரும் இந்த அரசு நல்லிணக்கம் பற்றிகதைப்பது வெட்கக்கேடானது.
பர்மாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச்சென்றஅகதிகளையே இந்தியக் கடலில் வைத்து இலங்கைகடற்படையினர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர்கைது செய்து யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவந்திருந்தனர். அந்த அகதிகள் ஊர்காவற்றுறைபொலிஸில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்துவிடுதலை பெற்று ஐ நா அதிகாரிகள் அவர்களைபொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. நயவஞ்சக ஆட்சி

    ReplyDelete
  2. இலங்கையருக்கே இலங்கை போலிஸ்

    ReplyDelete
  3. இதற்கு அந்த ஐ நா அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்.அவரகளும் இந்த அரசைப்போல் கையாலாகதவர்கள் தானோ.

    ReplyDelete
  4. புதிய தேர்தல் அமைப்பு தொடர்பாக முஸ்லீம்களின் கவணத்தை திசை திருப்பும் அரசாங்த்தின் திட்டமிட்டே செயலே இது

    ReplyDelete

Powered by Blogger.