Header Ads



பஹ்ரைனில் இலங்கையர்களுக்கு, அதிக தொழில்வாய்ப்பு

பஹ்ரைன் நாட்டில் இலங்கையர்களுக்கு அதிக தொழில்வாய்ப்புக்களை பெற்றுத்தர பஹ்ரைன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள நேற்று பஹ்ரைன் நாட்டின் தொழில் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் ஜமீல் பின் முஹம்மதை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது பஹ்ரைன் தொழில் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

"பஹ்ரைனில் இதுவரை சுமார் 11ஆயிரம் இலங்கையர்கள் பல்வேறு தொழில்களில் இருந்துவருகின்றனர். அவர்களின் தொழில் நடவடிக்கைகள் தொடர்பில் பஹ்ரைன் அரசாங்கத்தின் பாராட்டை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன் அவர்களின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இங்கு இருக்கும் தொழிநுட்ப வளர்ச்சிகளை எதிர்காலத்தில் இலங்கைக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம். அத்துடன் பஹ்ரைனில் இலங்கையர்களுக்கு கூடுதலான தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க முயற்சிப்போம்" என தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.