Header Ads



நல்லாட்சியின் சதித்திட்டம், கடுமையாக சாடுகிறார் மஹிந்த

ஐக்கிய தேசியக் கட்சியும் அந்த கட்சிக்கு ஆதரவளித்து வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய நல்லாட்சி சதித்திட்டகார்கள் ஒன்றாக இணைந்து திகதியை அறிவிக்காது மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்க மாகாண சபை சட்டத்தில் மாற்றம் செய்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல் சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர அரசாங்கம் முதலில் முயற்சித்தது.

அதற்கான அரசியலமைப்பு திருத்த சட்டத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் அறவித்தது. இதனால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

இந்த நிலையில், தற்போதைய மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், அரசியலமைப்புச் சட்டத்தின் 150(இ) பந்திக்கு அமைய மாகாண சபை தானாக கலைக்கப்பட்டு விடும்.

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் பதவிக்காலம் அடுத்த சில தினங்களில் முடிவடையவுள்ளது. ஏனைய மாகாண சபைகள் எதிர்வரும் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கலைந்து விடும்.

மாகாண சபைகள் கலைக்கப்படுவதை தடுக்க முடியாது என்ற போதிலும் மாகாண சபைத் தேர்தல் சட்டத்திற்கு அரசாங்கம் அவசரமாக அறிமுகப்படுத்திய மாற்றங்கள் காரணமாக தொகுதி வாரியாக தேர்தலை நடத்த வேண்டும் என்ற காரணத்தை காட்டி அனைத்து மாகாண சபைகளின் தேர்தலையும் அரசாங்கம் திகதியை அறிவிக்காது ஒத்திவைத்துள்ளது.

தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒத்திவைக்கப்பட்டிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கவும் அரசாங்கம் இந்த காரணத்தையே பயன்படுத்தியது எனவும் முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. u need election to put your black money and sil redhi... no shame ... public hora

    ReplyDelete

Powered by Blogger.