Header Ads



மியான்மருடனான வர்த்தகத்தை, நிறுத்திவைத்த மாலைத் தீவு

மியான்மரின் ரக்கீன் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையின் காரணமாக, கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதியில் இருந்து 123,000க்கும் அதிகமான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தப்பி ஓடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹிஞ்சா முஸ்லிம்களின் நிலை குறித்து பல முஸ்லிம் நாடுகளும் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளன.

"மியான்மரில் ஏற்பட்டுள்ள அனைத்து விதமான வன்முறையும் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் அங்குள்ள மக்களுக்குக் குறுகிய மற்றும் நீண்ட காலத்திற்கான மனிதாபிமான உதவிகள், அபிவிருத்தி உதவிகளை வழங்க வேண்டும்" என இந்தோனேசியா வெளியுறத்துறை அமைச்சர் ரெட்னோ மார்சுடி கூறியுள்ளார்.

மேலும், மியான்மரின் நடைமுறை தலைவரான ஆங் சான் சூச்சியையும், ரெட்னோ மார்சுடி கடந்த திங்களன்று சந்தித்து பேசினார்.

மியான்மர் விவகாரம் தொடர்பாக போராட்டம் நடக்கும் பல நாடுகளில், இந்தோனேசியாவும் ஒன்று. பாகிஸ்தானும், மலேசியாவும் இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ளன.

மியான்மருடனான வர்த்தகத்தை மாலத்தீவு நிறுத்தி வைத்துள்ளது.

ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான ராணுவத்தின் பிரசாரத்திற்கு கண்டனம் தெரிவிக்குமாறு சூச்சிக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. ஆனால், பலம் மிக்க ராணுவம் மற்றும் ரோஹிஞ்சா மக்களுடனான விரோதப் போக்கை கொண்டுள்ள பர்மா மக்களையும் சூச்சி எதிர்கொள்கிறார்.

No comments

Powered by Blogger.