Header Ads



நீர்க்காகத்தை பார்வையிடப் போகும், ஜனாதிபதி மைத்திரிபால


கடற்படை, விமானப்படையுடன் இணைந்து சிறிலங்கா இராணுவம் நடத்தும், ‘நீர்க்காகம் பயிற்சி- VIII – 2017’ கூட்டுப் போர்ப் பயிற்சியை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை நேரில் பார்வையிடவுள்ளார்.

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி கடற்கரைப் பகுதியில் நடத்தப்படவுள்ள போர்ப்பயிற்சியை, பார்வையிடுவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான விஜேவர்த்தன, பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன ஆகியோரும் இந்தக் கூட்டுப் பயிற்சியை பார்வையிடவுள்ளனர்.

13 நாடுகளைச் சேர்ந்த 69 படையினர் மற்றும் அதிகாரிகளும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றனர்.

கடந்த 3ஆம் நாள் மின்னேரியாவில் தொடங்கிய இந்தக் கூட்டுப் பயிற்சி, வரும் 24ஆம் நாள் வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

No comments

Powered by Blogger.