Header Ads



டெங்கு நோயினால், வைத்தியர் உயிரிழப்பு

கராப்­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் பெண் வைத்­திய ஒருவர் டெங்கு நோயால் பீடிக்­கப்­பட்டு உயி­ரி­ழந்­துள்ளார். ஹப­ரா­துவ, கினி­கல பிர­தே­சத்தைச் சேர்ந்த 52 வய­தான வைத்­தியர் எம். அனோமா ஜய­வர்­தன என்ற மூன்று பிள்­ளை­களின் தா‍யொ­ரு­வரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்ளார்.

இவ்­வைத்­தியர் கடந்த 13 ஆம் திகதி வைத்­தி­ய­சா­லையில்   தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்­று­வந்த நிலை­யி­லேயே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்ளார்.

இவ்­வைத்­தி­யரின் மக­ளொ­ரு­வரும் டெங்கு நோயினால் பீடிக்­கப்­பட்டு  கராப்­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­வந்த நிலையில் நேற்­றைய தினம் குண­ம­டைந்து வீடு திரும்­பி­யுள்­ள­தாக வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

உயி­ரி­ழந்த வைத்­தியர் காலி, நுக­துவ பிர­தே­சத்தில் தனியார் சிகிச்சை நிலை­ய­மொன்றை நடத்­தி­வந்­தி­ருந்த நிலையில் தின­மொன்றில் பெரும்­ப­கு­தியை அவர் குறித்த சிகிச்சை நிலை­யத்தில் கழிப்­பதால் அங்­கி­ருக்கும் போதே அவருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக அவ்வைத்தியரின் கணவர் தெரிவித்துள்ளார்.

(ரெ.கிறிஷ்­ணகாந்)

No comments

Powered by Blogger.