Header Ads



ரோஹின்யா முஸ்லிம்களின் கிராமங்களை, அரசு கைப்பற்றும் - மியன்மார் அரசு


மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைகளில் தீமூட்டப்பட்ட ரொஹிங்கிய முஸ்லிம்களின் கிராமங்கள் அரசு கைப்பற்றும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த வன்முறைகளால் அரை மில்லியன் ரொஹிங்கியாக்கள் பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றுள்ளர்.

தீயால் அழிந்த பகுதிகள் அபிவிருத்தி செய்யப்படும் என்று மியன்மார் அரசு குறிப்பிட்டுள்ளது. 

அரசின் புதிய திட்டத்தால் அந்த கிராமங்களில் இருந்து பங்களாதேஷுக்கு தப்பிச் சென்றிருக்கும் 480,000 க்கும் அதிகமான அகதிகள் மீண்டும் தமது வீடுகளுக்கு திரும்புவதில் சந்தேகம் எழுந்துள்ளது. இது ஓர் இன அழிப்பு நடவடிக்கை என அச்சம் எழுந்துள்ளது. ரக்கை மாநில தலைநகரான சிட்வேயில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட சமூக அபிவிருத்து, நிவாரண மற்றும் குடியேற்ற அமைச்சர் வின் ம்யாத் அயே கூறும்போது. “சட்டத்தின் அடிப்படையில் தீயில் அழிந்த நிலப்பகுதி அரச முகாமையின் கீழ் வரும்” என்றார்.

எனினும் வீடுகளுக்கு திரும்பும் ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு தமது பழைய வீடுகள் கிடைப்பது குறித்த எந்த ஒரு நம்பிக்கையும் இந்த அறிவிப்பில் வழங்கப்படவில்லை.

வடக்கு ரக்கைனில் வன்முறை காரணமாக 400க்கும் அதிகமான ரொஹிங்கிய கிராமங்களில் சுமார் பாதி அளவானவை தீயில் அழிந்திருக்கும் விபரத்தை செய்மதி படங்களை ஆதாரமாகக் கொண்டு உரிமைக் குழுக்கள் வெளியிட்டன.

இராணுவம் மற்றும் பெளத்த கும்பல்கள் வன்முறைகளில் ஈடுபடுவதாகவும் ரொஹிங்கியர்களை மியன்மாரில் இருந்து விரட்ட அவர்களின் வீடுகளுக்கு தீ வைப்பதாகவும் பங்களாதேஷ் தப்பிவந்த அகதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் தாம் மியன்மாரை சேர்ந்தவர்கள் என்பதற்கான போதிய ஆவணங்கள் இல்லாத நிலையில் மீண்டும் அங்கு செல்லும் வாய்ப்புகள் குறித்து பொரும்பாலான ரொஹிங்கிய அகதிகள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் 25 ஆம் திகதி ரொஹிங்கிய கிளர்ச்சியாளர்கள் மியன்மார் பொலிஸ் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்தே தற்போதை வன்முறை வெடித்தது. அது தொடக்கம் பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றிருக்கும் ரொஹிங்கிய அகதிகளின் எண்ணிக்கை 480,000 ஆக உயர்ந்துள்ளது. 

No comments

Powered by Blogger.