Header Ads



ரோஹிங்ய மக்களுக்காக பங்களாதேஷ் தனது கதவுகளைத் திறப்பதனால் ஏற்படும் செலவுகள் அனைத்தினையும், துருக்கி பொறுப்பேற்கும் - துருக்கி அதிரடி


வன்முறைகளின் காரணமாக ரகைன் மாநிலத்திலிருந்து தப்பியோடும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு, பங்களாதேஷ் தனது கதவுகளைத் திறந்து விட வேண்டும் என்று, துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லுட் சுவுசோக்லு அழைப்பு விடுத்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஹஜ் பெருநாள் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இந்த அழைப்பினை அவர் விடுத்தார்.

மேலும் ரோஹிங்ய மக்களுக்காக பங்களாதேஷ் தனது கதவுகளைத் திறப்பதனால் ஏற்படும் செலவுகள் அனைத்தினையும், துருக்கி பொறுப்பேற்கும் என்றும் இதன்போது அவர் உறுதியளித்தார்.

“இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பினை நாங்கள் ஒன்று கூட்டியுள்ளோம். ரகைன் மாநிலம் தொடர்பில் இந்த வருடம் ஒரு மாநாட்டை நடத்தவுள்ளோம். அதன்போது, இந்தப் பிரச்சினைக்கு தீர்க்கமானதும், நிரந்தரமானதுமான முடிவொன்றினை நாங்கள் காண வேண்டியுள்ளது”  என்றும், அமைச்சர்  மெவ்லுட் சுவுசோக்லு மேலும் கூறினார்.

மியன்மாரில் நடக்கும் மனிதப் படுகொலைகளுக்கு எதிராக, துருக்கி – உணர்வுகளை வெளிக்காட்டுவதாகவும், வேறு எந்தவொரு முஸ்லிம் நாடுகளும் இதுபோன்று நடந்து கொள்ளவில்லை எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

உலகில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில், அமெரிக்காவுக்கு அடுத்ததாக இரண்டாமிடத்தில் துருக்கியே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மியன்மாரில் நடைபெறும் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, துருக்கி ஜனாதிபதி எதுர்கான் இதுவரை 13 முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுடன் பேசியுள்ளதோடு, தனது கவலையினையும் வெளிப்படுத்தியுள்ளார் எனவும் அமைச்சர் மெவ்லுட் சுவுசோக்லு தெரிவித்தார்.

7 comments:

  1. உங்கள் கவலையும் தவிப்பும் போல ஏனையே தலைவர்களிடமும் இருந்தால் நமது சமுகத்தை யாரும் துன்புறுத்த மாட்டனுகள்

    ReplyDelete
  2. May Allah bless all muslim leaders who take concern of this issue.

    As turky is trying to solve this problem . May Allah bless turky in this work. Also all of us should .be happy with Saudi who has in the past given résidence to Many thousands of Rohingya ( Betmiyans) and all of them still living near to makkah .

    ReplyDelete
  3. Erdogan is a role model of Ialamic leader of Muslim Ummah .
    May Allah grant him n his country more n more strenth n resources .

    ReplyDelete
  4. துருக்கி நாட்டு ஜனாதிபதி எர்துஃஆன் அநியாயம் செய்யப்பட்ட மக்களுக்கு அவரால் இயன்ற இந்த அனுதாப உதவிக்கு உலமுஸ்லிம்களை வேண்டிகொள்கின்றார் இந்த காரணங்களுக்காவே அவருக்கும்,கட்டார் நாட்டுக்கும் பயங்கரவாதிகளுக்கு உதவுவதாக நமது முஸ்லிம் கயவர்கள் உலகுக்கு எடுத்து கூறுகின்றார்கள்.

    ReplyDelete
  5. His Excellency president of Turkey may Allah bless u and your country,that you are supporting rohingaya Muslims.actually his Excellency you are the leader of human being.



    ReplyDelete
  6. Are such Islamic-minded leaders like him?
    இவர் போன்ற இஸ்லாமிய உணர்வுள்ள தலைவர்கள் தோன்றுவார்களா

    ReplyDelete
  7. One hand never make sounds. All or majority Muslim countries must get together with the full co-operation of the neighboring countries of Myanmar. Its the human duty to assist wherever the affected people live. How Myanmar dare to use arms on innocent citizens of its own. why world countries just looking them desperately. No one is asking declare war on Myanmar but have to tell them to declare Peace.

    ReplyDelete

Powered by Blogger.