Header Ads



பிர­தேச சபையின் பெயரில், போலி பேஸ்புக் - ஆபாச செய்திகளும் பதிவேற்றம்

பேஸ்புக் போன்ற போலிக் கணக்கு  ஒன்றைத் திறந்து அதில் அர­சி­யல்சார் விரோத செய்­திகள் மற்றும் இளைஞர், யுவ­தி­களை பாதிக்கும் ஆபாசச் செய்­தி­களை பதி­வேற்றம் செய்யும் மோசடி நட­வ­டிக்கை வெளி­யா­கி­யுள்­ள­தாக பதுளை குற்றத் தடுப்பு பொலிஸ் பிரி­வி­ன­ரிடம் பிர­தேச சபையின் செய­லாளர் டி.ஏ. தன­பா­ல­வினால் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

பதுளை பிர­தேச சபையின்  உத்­தி­யோ­க­பூர்வ பேஸ் புக் போன்று  இனந்­தெ­ரி­யாத நபர் ஒரு­வ­ரினால் செயற்­ப­டுத்­தப்­பட்டு பிர­தேச சபையின் சின்னம் அதில் பொறிக்­கப்­பட்டு அதன் பின்னால் மலர் ஒன்று வரை­யப்­பட்­டி­ருந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.  இம்­மு­றைப்­பாடு தொடர்­பாக குற்­ற­வியல் பொலிஸார் துரித விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

இதே­போன்று கடந்த 9 ½ மாத­காலப் பகு­தியில் பேஸ்புக் தொடர்­பான 2200 முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ள­தாக இலங்­கையின் பிர­தான கணனி தொழில்­நுட்ப தகவல் பிரிவு தெரி­வித்­துள்­ளது. இம்­மு­றைப்­பா­டு­களில் 60 சத வீத­மா­னவை பெண்­க­ளி­ட­மி­ருந்து கிடைத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முகநூல் தொடர்­பான முறைப்­பா­டு­களை 011  – 2691692 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியுமென்றும் தொழில் நுட்ப பிரிவு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

(லெ. மக­ராஜன்)

No comments

Powered by Blogger.