Header Ads



முஸ்லிம்கள், வெட்கப்பட வேண்டும்...

இன்று முஸ்லிம்கள் சம்பந்தப்படும் எந்த விடயத்தை எடுத்து நோக்கினாலும் இவ்வரசானது முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கின்றது. மியன்மார் விடயத்திலும் அதுவே நடந்தேறியுள்ளது. Sltj இன் கண்டனப் பேரணியில் தலையிட்ட நீதிமன்றம் பேரினவாதிகளின் கண்டனப் பேரணி விடயத்தில் எந்தவித தலையீட்டையும் செய்திருக்கவில்லை. குறைந்தது இவ்வரசானது இருவருக்கும் தடையுத்தரவை அல்லது பூரண அனுமதியை வழங்கி நடுநிலை பேணியிருக்கலாம். Sltj இற்கு ஒரு நீதியும் பேரினவாதிகளுக்கு ஒரு நீதியும் கடைப்பிடித்ததிலிருந்து, நடுநிலையில் இருந்து விலகு பேரின வாதிகளுக்கு ஆதரவுப் போக்கை கடைப்பிடிப்பதை துல்லியமாக்குகின்றது.

அது மாத்திரமன்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் மியன்மார் நாட்டவர்களுக்கான விசாவையும் இவ்வரசு தடை செய்துள்ளது. அமைச்சர் சம்பிக்க ரணவக்க இலங்கையில் மியன்மார் அகதிகள் உள்ள நிலையில், இலங்கையில் மியன்மார் அகதிகள் இல்லை என கூறும் நிலையில் இலங்கை அரசின் நிலை உள்ளது. வடகொரியா விடயத்தில் கண்டன அறிக்கை விடும் இவ்வரசால் மியன்மார் விடயத்தில் வாய் திறக்கவும் முடியவில்லை. இதுவெல்லாம் இவ்வரசு பேரினவாதிகளை திருப்தி செய்ய முனைவதை எடுத்துகாட்டுகிறது.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க இனவாதிகளோடு சேர்ந்து கூப்பாடு போடாமல், மியன்மார் மக்கள் இல்லையென கூறியதன் மூலம் முஸ்லிம்களுக்கு சார்பான போக்கை கடைப்பிடித்துள்ளமையை பாராட்டியேயாக வேண்டும்.மியன்மார் மக்களுக்கு மியன்மார் நாட்டில் கூட குடியுரிமை இல்லை. அவர்களுக்கு எவ்வாறு விசா இருக்க முடியும்? இப்படியான நிலையில் அதனை கூட தடை செய்வதன் மூலம் இவ் அரசின் இனவாத சிந்தனையின் அளவை மட்டிட்டுக்கொள்ளச் செய்யலாம்.

இவ்வரசை தான் முஸ்லிம்கள் வரிந்து கட்டிக் கொண்டு வாந்தார்கள். இதற்கு முஸ்லிம்கள் வெட்கப்பட வேண்டும்.

அ. அஹமட் -

2 comments:

  1. I agree with this article. Muslims have to think twice before act.

    ReplyDelete
  2. it is because of on going world order. We had better think twice before writing such like news and comments.

    ReplyDelete

Powered by Blogger.