Header Ads



மியன்மாரில் இனச்சுத்திரிகரிப்போ, இனப்படுகொலைகளோ இடம்பெறவில்லையாம்..!


மியன்மாரில் இனச்சுத்திகரிப்பு இடம்பெறவில்லை என்று, அந்த நாட்டின் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தரதூதுவர் ஹோ டு சோன் தெரிவித்துள்ளார்.

மியன்மாரின் ரக்கின் பிராந்தியத்தில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாட்டின் படையினர் துன்புறுத்தல்களை புரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி பங்களாதேஸ் உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இது திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை என்று ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகின்றன.

எனினும் மியன்மாரின் தூதுவர் இதனை மறுத்துள்ளார்.

மியன்மாரில் இனச்சுத்திரிகரிப்போ, இனப்படுகொலைகளோ இடம்பெறவில்லை.

நீண்டகாலமாக மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்திறாக போராடிய மியன்மார் நாட்டின் தலைவர்கள், அவ்வாறான கொள்கைகளை வகுக்க மாட்டார்கள் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

No comments

Powered by Blogger.