Header Ads



தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்படுவார்களா? பாராளுமன்றத்தில் கேள்வி

ஒலுவில் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் கிரா­மத்­துக்குள் நுழைந்தால் தாக்­குதல் நடத்­து­மாறு ஒலுவில் பகுதி மக்­க­ளுக்கு பல்­க­லை­க­ழக நிர்­வாகம் கோரி­யுள்­ள­தாக அக்­க­ரைப்­பற்று பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. 

அது உண்­மையா? அப்­ப­டி­யாயின் நிர்­வா­கத்­துக்கு எதி­ராக என்ன நட­வ­டிக்கை எடுக்க போகின்­றீர்கள் என கூட்டு எதிர்க்­கட்­சியின் நாடா­ளு­மன்ற குழுத்  தலைவர் தினேஷ் குண­வர்­தன சபையில் கேள்வி எழுப்­பினார்.

அத்­துடன் 1500 மாண­வர்­க­ளுக்கு பரீட்சை உரிமை பறிக்­கப்­பட்­டுள்­ளது. இவர்­க­ளுக்கு பரீட்சை எழுத அனு­ம­திக்­கப்­ப­டுமா எனவும் அவர் கேள்வி எழுப்­பினார்.

நாடா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நிலை­யியற் கட்­டளை 23 இன் 2 ஆம் கீழ் கேள்­வி­எ­ழுப்பும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

ஒலுவில் பல்­க­லைக்­க­ழ­கத்தில்  55 மாண­வர்­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட வகுப்புத் தடை கார­ண­மாக சுமார் 9 மாதங்­க­ளாக அவர்­க­ளுக்கு வகுப்­பு­க­ளுக்கு செல்ல முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

மேலும் இரு­வ­ருக்கு வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான செயற்­பா­டுகள் அனைத்தும் நிர்­வா­கத்தின் பழி­வாங்கல் செயற்­பா­டா­கவே கருத வேண்­டி­யுள்­ளது. இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளினால் மாண­வர்­க­ளுக்கு பரீட்­சைக்குத் தோற்றும் உரிமை பறிக்­கப்­பட்­டுள்­ளது. 

அத்­துடன் 80 வீத வகுப்பு வரவு இருக்க வேண்டும் என்ற விதி­மு­றை­மையின் கார­ண­மாக 1500 பேருக்கு பரீட்சை எழுத முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. எனவே வகுப்பு வர­வினை 80 வீதத்­தி­லி­ருந்து 40 வீத­மாக குறைக்க வேண்டும். 

மேலும் ஒலுவில் பல்­க­லை­க­ழக மாண­வர்கள் கிரா­மத்­திற்குள் நுழைந்தால் தாக்­குதல் நடத்­து­மாறு ஒலுவில் பகுதி மக்­களை பல்­க­லை­க­ழக நிர்­வாகம் கோரியுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது உண்மையா? அப்படியாயின் நிர்வாகத்திற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க போகின்றீர்கள் என்றார்.

(எம்.எம்.மின்ஹாஜ்)

No comments

Powered by Blogger.