Header Ads



முஸ்லிம்களின் மானம் மட்டும்தான், பாதுகாக்கப் படவேண்டுமா..? சிங்களவரின் கேள்வி இது..

-Safwan Basheer-

இன்று ஒரு சிங்கள நண்பன்  என்னிடம் வந்து,

"உங்களது பெண்களின் புகைப்படங்களை பேஸ்புக்கில் போடுவது தடைசெய்யப்பட்டுள்ளதா ? என்று கேட்டான்.

அப்படி தடையேதுமில்லை  என்று சொல்லிவிட்டு,  ஏன் திடீர் என்று இந்தக் கேள்வியைக் கேட்டீர்கள் என்று நான் கேட்டேன்.

அதற்கு அவர் அளித்த பதில்....

அண்மையில் அவர் படித்த பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு  விழா நடந்திருக்கின்றது. அவரது சக முஸ்லிம் நண்பர் ஒருவர் அந்தப் பட்டமளிப்பு விழாவின் புகைப்படங்களை பேஸ்புக்கில்  பதிவேற்றி இருக்கிறார்.

அப்போது அந்த முஸ்லிம் நண்பர் அவரது மனைவி மற்றும் குடும்பப் பெண்களின் முகத்தை மறைத்தே பதிவிட்டு இருக்கின்றார்.

ஆனால் அவரது சிங்கள நண்பிகள் பலரின் புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றி இருக்கும் இந்த முஸ்லிம் சகோதரன், அவர்களது முகத்தை மறைக்கவில்லயாம்.

"அப்போ முஸ்லிம் பெண்களின் மானம் மரியாதை மட்டும்தான் பாதுகாக்கப் பட  வேண்டும் எங்களது பெண்கள் எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை  அப்படியா உங்களது மார்க்கம் சொல்கிறது" என்று அந்த சிங்கள சகோதரர் என்னிடம் கேட்டார்.

மிக நீண்ட நேர உரையாடலுக்குப் பின்னர் அந்த சகோதரரை ஓரளவு சமாளிக்க முடிந்தது.

இந்தப் பிழையை எமது நிறைய சகோதரர்கள் முகநூலில் விடுவதை  நாமும் அவதானித்து இருக்கிறோம்.

பட்டமளிப்புவிழா மாதிரி ஒரு மகிழ்ச்சியான தருணங்களை ஒருவர் பகிரும்போது அதில் போய் மாற்றுக் கருத்து சொல்வது அழகில்லை என்று அமைதியாக இருந்திருக்கின்றோம்.

உங்களது மனைவியின் அல்லது தாயின் புகைப்படங்களை முகத்தை மறைத்து பதிவிடுவது உங்களது விருப்பம் அதை யாருக்கும் மறுக்கவோ, தடுக்கவோ முடியாது.

உங்கள் குடும்பப் பெண்களின் விடயத்தில் இவ்வளவு கவனமாக இருக்கும் நீங்கள்  நிச்சயமாக உங்களைச் சுற்றி இருக்கும்  மாற்றுமதப் பெண்கள் குறித்தும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

சில நேரம் இதே சிங்கள சகோதரிகள் அவர்களது பேஸ்புக் பக்கதில் விதவிதமாக அவர்களது புகைப்படங்களை பகிர்பவர்களாக இருக்கலாம். அது அவர்களது விருப்பம்.

ஆனால் எமது பெண்களின் முகத்தை மட்டும் மறைத்து விட்டு அவர்களது புகைப்படங்களை அப்படியே நாம் நமது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துவிடுவது,  இஸ்லாம் குறித்தும், பெண்கள் குறித்த இஸ்லாத்தின் பார்வை குறித்தும் மிக மோசமான ஒரு விம்பத்தை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

4 comments:

  1. சில படித்த மடயன்கள் கூழுக்கும ்மீசைக்கும் ஆசைப்பட்டு இப்படி முட்டாள் தனமாய் நடந்து கொள்வதை நிறுத்திக்கொள்ளள வேண்டும்.

    ReplyDelete
  2. Taking photo? For What? As for scholars opinion... Do take photo only for compulsory cases like ID Passport. Medical ..like. But taking photo for women or men in Islam is not welcome. It is fun discussing advice for a wrong act how to do.

    ReplyDelete
  3. Buddhist girls don't bother much about sharing their pictures in social media.
    I think purposely that guy has argued to defend the dignity of Buddhist girls.

    ReplyDelete

Powered by Blogger.