Header Ads



டுபாயில் இருந்து இலங்கையை, ஆட்டிப்படைக்கும் மாகந்துரே மதுஷ்

இலங்கையின் பாதாள உலக பிதாமகன் (God Father) என அழைக்கப்படும் மாகந்துரே மதுஷ் என்பவரை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் ஊடாக பிடியாணை பிறப்பிக்க, பாதாள உலகக்குழுக்களை ஒழிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள புதிய நடவடிக்கை பிரிவு தீர்மானித்துள்ளது.

மாகந்துரே மதுஷ் என்பவர் துபாய் நாட்டில் வசித்து வருகிறார்.

அண்மையில் நடந்த சமயங் என்ற பாதாள உலக தலைவர் உள்ளிட்டோரின் கொலைகள், பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ மீதான துப்பாக்கி பிரயோகம், முல்லேரியாவில் வர்த்தகர் ஒருவர் மீதான துப்பாக்கி பிரயோகம் உட்பட பல சம்பவங்களுக்கு மாகந்துரே மதுஷ் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும் இதுவரை மதுஷ் என்ற இந்த சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச பொலிஸார் ஊடாக பிடியாணை பிறப்பிக்க, இலங்கை பொலிஸாருக்கு முடியாமல் போயுள்ளதாக பாதாள உலகக்குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால், பாதாள உலகக்குழுக்கள் மற்றும் போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் கடந்த மாதம் 12ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைமையகத்தில் புதிய நடவடிக்கை பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது.

மதுஷ் செய்துள்ள குற்றச்செயல்கள் சம்பந்தமாக இலங்கையின் நீதிமன்றத்தின் ஊடாக சர்வதேச பிடியாணையை பிறப்பிக்க புதிய நடவடிக்கை பிரிவு முனைப்புகளை மேற்கொண்டுள்ளது.

விசேட அதிரடிப் படையினரை கொண்டு இந்த புதிய நடவடிக்கை பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.