Header Ads



ரோஹின்யா முஸ்லிம்கள் படுகொலை - கிழக்கு மாகாண சபையில் கண்டனத் தீர்மானம்

மியன்மாரில், ரோஹிஞ்சா முஸ்லிம்கள் படுகொலை தொடர்பான விசேட கண்டனத் தீர்மானம், கிழக்கு மாகாண சபையில், இன்று (07)  நிறைவேற்றப்பட்டது.

மாகாண சபை அமர்வு, காலை 10.00 மணியளவில், தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலமையில் கூடியபோது, இதற்கான விஷேட பிரேரணையை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை சமர்பித்தார்.

இதனை வழிமொழிந்து உறுப்பினர் ஆர்.அன்வர் உரையாற்றினார். இந்தத் தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், விவாதமின்றி, பிரதமர், ஜனாபதி உள்ளிட்டவர்களுக்கு அனுப்பி வைப்பதாக தவிசாளர் சபையில் அறிவித்தார்.

மியன்மார் பிரதேசத்தில், ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதனைத் தடுக்க ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட  மனித உரிமை அமைப்புக்களுக்கு இத்தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் அனுப்ப வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.


1 comment:

  1. Jazakallahr BrUthumalebbe ,Anver n PC members .
    Your move will go longway as part of our intnl campaighn .

    ReplyDelete

Powered by Blogger.