Header Ads



காவிக் கும்பலின் நடவடிக்கைக்கு, நாமும் பொறுப்புச் சொல்ல வேண்டும்..!

-Safwan Basheer-

துருக்கி ரோஹிங்ய மக்களுக்கு இடம் கொடுக்கவில்லை என்று பேஸ்புக்கில் பொங்கினோம்.....

சவூதிக்கு ரோஹிங்ய மக்களுக்கு அடைக்களம் கொடுக்க முடியும் என்று பேஸ்புக்கில் கட்டுரை எழுதினோம்.....

கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்தோம்....

ரோஹிங்யாவில் என்ன நடக்கிறது  என்று உரைகள் நிகழ்த்தினோம்....

ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு நடக்கும் அநீதிகள் குறித்த செய்திகளைப் பகிர்ந்தோம்......

உலகில் முஸ்லிம்களுக்கு என்ன நடந்தாலும் நான் மேலே சொன்ன அனைத்தையும் நாம் தவறாமல்  செய்து வருகின்றோம்.

இப்போது எமக்கான ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கிறது.

கொழும்பில் தங்கியிருந்த நான்கைந்து ரோஹிங்ய அகதிகள் குடும்பத்தையும்
வீடுகளி்ல் இருந்து விரட்டியிருக்கிறது ஒரு காவிக் கும்பல்.

இந்தக் காவிக் கும்பலின் நடவடிக்கைகளுக்கு நாமும் பொறுப்புச் சொல்ல வேண்டும்.

பேஸ்புக்கில் நாம் ரோஹிங்ய மக்களுக்கு  குரல் கொடுப்பதாக நினைத்து செய்யும் நிறைய விடயங்கள் இங்குள்ள சிங்களப் பேரினவாதிகளுக்கு இங்கே ஒரு இனவாத அலையை உருவாக்க நல்லதொரு கருப்பொருலாக அமைந்து விடுகின்றது.

எமது ஆர்ப்பாட்டங்களும் இங்கே இருக்கும் சிங்களப் பேரினவாதிகளை உசுப்பேத்துகிறதே தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நீதியையும் பெற்றுக் கொடுப்பதில்லை.

இந்த மக்களுக்கு நீதியைப்பெற்றுக் கொடுப்பதற்கும் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான வாழ்விடத்தை அமைத்துக் கொடுப்பதுற்கும் எம்மால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் எம்மால் இந்த நான்கைந்து குடும்பங்களுக்கேனும் உதவ முடியாவிட்டால், ரோஹிங்ய மக்களுக்கு  துருக்கி சிடிஸன் கொடுக்கவில்லை சவூதி சும்மா பார்த்துக் கொண்டிருக்கிறது  என்று கட்டுரை எழுதுவதற்கு எமக்கு  எந்தத் தகுதியுமில்லை.

5 comments:

  1. ஒரு சிலர் செய்யும் செயல் ஒட்டு மொத்த சமுகத்தையும். பாதிக்கும் என்பதை மறந்து விடவேண்டாம்.

    ReplyDelete
  2. We agree with above points....but we shouldn't assume that these monks and sinhala thugs like Don prasad are reacting only after our activities like protest etc. They don't like peace.they want muslims to be troubled always. Theire minds are fully occupied with jelous and cruelty. they have allready planned a agenda against muslims. That's why every times they come with different allegation. When one fails they jumped to another...then they forget about previous issue..never talk about that again ... they know what they are accusing against us is not true... That's why they can't continue with one...If we see carefully the sequence of allegations they brought against muslims from aluthgama incident we can understand clearly.
    All the allegation they brought against us are baseless and not true..
    Even if we stop protest etc they are not going to stop ..
    They will create new issue and come to scene. ..

    ReplyDelete
  3. Mr. Rizwan is partially correct but none had the courage, and wherewithal to refute the charges against Muslims in a polite and prudent manner.The poor Shiraz Noordeen was left alone without any effective support from Muslim Community to legally challenge the mischievous elements. WE need tact and wit not loud noises to counter the challenge. There is not a single person in our Muslim Society who has the Oratory capacity and fluency in Sinhalese ( such as Mr. Wimal Weeravansa, Mr. Udaya Gamanpila, or Prof. Sarath Edirisooriya) to counter the false allegations. We do not have any media to support us. It is high time we make our Muslim Media Unit to air our views.

    ReplyDelete
    Replies
    1. I agree with u... I think this is the high time us to work together for making such capable bodies to encounter the current issues....all jamaths groups should get to getogether and come to a common platform to deal this problem in future

      Delete
  4. @ Rizwan even if Jamaths members agree to work with other Jamath members their selfish leaders won't let that happen.
    Whenever their members fight have they ever discouraged them or gave a statement ?
    Our downfall is our division. Small small things we Muslims are divided.

    ReplyDelete

Powered by Blogger.