Header Ads



அமெரிக்காவிற்கு இணையாக உலகின், முதல் அபாயகர வெடிகுண்டை தயாரித்துள்ளோம் - ஈரான்

அமெரிக்காவிற்கு இணையாக உலகின் முதல் அபாயகரமான வெடிகுண்டை தயாரித்து விட்டதாக ஈரான் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் நாட்டின் விமானப்படை தளபதியான Amir Ali Hajizadeh என்பவர் அரசாங்க செய்தி நிறுவனத்திற்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ‘வெடிகுண்டுகளின் தந்தை’(Father of all bombs) எனப்படும் 10-ton bomb என்ற வெடிகுண்டை தயாரித்து சாதனை படைத்துள்ளோம்.

இந்த வெடிகுண்டை விமானத்தில் இருந்து வீசினால் பெரும் அழிவை ஏற்படுத்தும்.

அமெரிக்காவின் ‘Mother of all bombs'(MOAB) என்ற வெடிகுண்டிற்கு இணையான சக்தி கொண்டது 10-ton bomb.

இதன் மூலம் அமெரிக்காவிற்கு நிகரான ஆயுத சக்தி தற்போது எங்களிடம் உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கும் ஈரான் நாட்டிற்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்து வரும் நிலையில் ஈரான் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அபாயகரமான ஆயுதங்களை தயாரிப்பதாக கூறி ஈரான் நாட்டின் மீது ஐ.நா சபை பொருளாதார தடையை விதித்திருந்தது.

ஐ.நா சபையின் கோரிக்கையை ஏற்று ஆயுத உற்பத்தியை ஈரான் நிறுத்துவதாக அறிவித்ததை தொடர்ந்து அந்நாட்டின் மீதான பொருளாதார தடை விலக்கப்பட்டது.

ஆனால், தற்போது ஈரான் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு மத்தியில் நிலவி வரும் பனிப்போரை மோசமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2 comments:

Powered by Blogger.