Header Ads



வெள்ளைத் தாளைக் காண்­பித்து, கிழக்கு முத­ல­மைச்சர் அரங்கேற்றிய நாடகம் - உது­மா­லெப்பை

மாகாண சபையின் சம்­பி­ர­தா­யங்­களை மீறி ஜன­நா­யக விரோ­த­மான முறை­யி­லேயே 20 ஆவது திருத்தச் சட்டம் கிழக்கு மாகாண சபையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் வெள்ளைத்தாள் ஒன்றைக் காண்­பித்து முத­ல­மைச்சர் அனை­வ­ரையும் ஏமாற்­றி­விட்­ட­தா­கவும் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்­கட்சித் தலைவர் எம்.எஸ். உது­மா­லெப்பை குற்­றம்­சாட்­டினார்.

நேற்­றைய தினம் -11- கிழக்கு மாகாண சபையில் இடம்­பெற்ற வாக்­கெ­டுப்பின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்கும் செய்­தி­யாளர் மாநாட்­டி­லேயே அவர் அதனைக் குறிப்­பிட்டார்.

இங்கு அவர் கருத்து வெளி­யி­டு­கையில், 

கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் திருத்­தங்கள் தொடர்­பாக நாம் கேள்­வி­யெ­ழுப்­பி­ய­போது ஒரு வெள்ளைத் தாள் காண்­பிக்­கப்­பட்­டது. அது சட்­டமா அதிபர் உயர் நீதி­மன்­றத்­திற்கு சமர்ப்­பித்த திருத்­தங்கள் அடங்­கிய ஆவ­ணத்தின் பிர­தியே அது­வாகும். இந்த ஆவ­ணத்தில் உள்­ள­டங்­கி­யுள்ள விட­யங்­களை நம்­பியே இந்த வாக்­கெ­டுப்பில் உறுப்­பி­னர்கள் வாக்­க­ளிக்க வேண்டும் என்றும் முத­ல­மைச்சர் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் வேண்­டு­கோள்­வி­டுத்தார்.

இப்­பின்­ன­ணி­யி­லேயே குறித்த நாடகம் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளது. மாகாண சபைக்கு மேலும் அதி­காரம் வேண்டும் என்று போராடிக் கொண்­டி­ருக்­கின்ற தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்கள் முத­ல­மைச்சர் காண்­பித்த வெ ள்ளைத் தாளை நம்பி அதற்கு வாக்­க­ளிப்­பார்கள் என்று நாம் ஒரு­போதும் எதிர்­பார்க்­க­வில்லை.

தமிழ் பேசும் மக்­களைக் கொண்டே தமிழ் பேசும் மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­களைப் பறிக்­கின்ற செயற்­பாட்­டுக்கு அனை­வரும் துணை­போ­யுள்­ளார்கள். இது ஒரு சட்­ட­வி­ரோ­த­மான வாக்­கெ­டுப்­பாகும். இதில் அவர்கள் வெ ற்றி பெற்­ற­தாக கூறி­னாலும் வடக்கு கிழக்கில் வாழு­கின்ற தமிழ் பேசும் மக்கள் தோல்­வி­ய­டைந்­து­விட்­டார்கள். இது தமிழ் பேசும் மக்­க­ளுக்குச் செய்­யப்­பட்ட மிகப் பெரிய அநியாயமாகும். இதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி நாம் யோசிக்கிறோம்.

1 comment:

Powered by Blogger.