Header Ads



மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி மன்றங்களை, உருவாக்க உடனடி நடவடிக்கைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,

கோறளைபற்று பிரதேச சபை எல்லைக்குள் இரண்டு புதிய பிரதேச சபைகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும், கோறளைபற்று பிரதேச செயலக பிரிவிற்கு நகர சபை உருவாக்கப்படவும் வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளேன்.

இதற்கு அமைய இப் பிரதேச சபைகளை உருவாக்குவதற்கான முறையான அறிக்கைகளினை சமர்பிக்க மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சினால் குழுவொன்று நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை ஏறாவூர்பற்று (செங்கலடி) பிரதேச சபையின் ஒரு பகுதியினை நகர சபையாக மாற்றியும் பதுளை வீதியில் அமைந்துள்ள கிராமங்களை ஒரு பிரதேச சபையாகவும் மாற்று மாறும் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

அத்தோடு களுவாஞ்சிகுடி - மண்முனை, தென்எருவில் பற்று பிரதேச சபையினை ஒரு பிரதேச சபை, ஒரு நகர சபை அல்லது இரு பிரதேச சபையாக மாற்றுவதற்கும், மட்டக்களப்பு மாநகர சபையின் ஒரு பகுதியை பிரதேச சபையாகவும் ஏனைய பகுதியை மாநகர சபையாகவும் உருவாக்குவதற்கும் கோரியுள்ளேன்.

இவ்விடயங்களுக்கு உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு ஆதரவு வழங்கி உறுதி வழங்கியுள்ளதால் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கு முன் இவைகளை நடைமுறைபடுத்த அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என நான் நம்புகிறேன்.

இந்த விடயங்கள் தொடர்பாக தொடர்ந்து அமைச்சருடன் பேசி நடவடிக்கையை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.